ஐபிஎல் திருவிழா 2021: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் போட்டி முன்னோட்டம், ஃபேண்டஸி லெவன் குறிப்பு!

Updated: Mon, Apr 26 2021 13:19 IST
Image Source: Google

ஐபிஎல் போட்டியில் இன்று நடைபெறும் 21 ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடா்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியுள்ள நிலையில், கொல்கத்தா 1 வெற்றியும், பஞ்சாப் 2 வெற்றியும் பெற்றுள்ளன.

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
  • இடம் - நரேந்திர மோடி மைதானம், அகமதாபாத்
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

கொல்கத்தாவைப் பொறுத்தவரை முதல் ஆட்டத்தில் மட்டும் வென்ற நிலையில், அடுத்த 4 ஆட்டங்களிலும் தொடா்ந்து தோல்வியை சந்தித்துள்ளது. முற்றிலுமாக சரிவைச் சந்தித்துள்ள அந்த அணியின் பேட்டிங் வரிசை மீண்டால் மட்டுமே கொல்கத்தாவுக்கு வெற்றிகள் வசமாகும். நிதீஷ் ராணா, தினேஷ் கார்த்திக், சுப்மன் கில் ஆகியோர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.

கேப்டன் இயான் மோர்கன், ஆண்ட்ரே ரசல் ஆகியோர் இன்னும் சரியான பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும். பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவா்த்தி, பிரசித் கிருஷ்ணாவுடன், பேட் கம்மின்ஸும் சிறப்பாகச் செயல்படுகின்றனர். 

பஞ்சாப் அணியை பொருத்தவரை தொடர் தோல்வியிலிருந்து மீண்டு கடைசி ஆட்டத்தில் வென்றுள்ளது. எனவே இந்த ஆட்டத்திலும் வென்று உத்வேகத்தை தக்க வைக்க அந்த அணி முயற்சிக்கும்.

கேப்டன் ராகுல், மயங் அகர்வால் நல்ல பார்மில் இருக்கிறார். கடந்த போட்டியில் கெயில் பொறுப்பு உணர்ந்து சிறப்பாக விளையாடியது, அணிக்கு நம்பிக்கையை சேர்த்துள்ளது. எனினும் நிகோலஸ் பூரன், தீபக் ஹூடா இன்னும் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர். பவுலிங்கில் அனுபவம் வாய்ந்த முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அா்ஷ்தீப் ஆகியோர் நல்ல முறையில் செயல்படுகின்றனர்.

நேருக்கு நேர்

ஐபிஎல் தொடரில் இதுவரை இரு அணிகளும் 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 18 முறையையும், பஞ்சாப் கிங்ஸ் அணி 9 முறையும் வெற்றிபெற்றுள்ளது.

உத்தேச அணி

பஞ்சாப் கிங்ஸ் - கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல், நிக்கோலஸ் பூரன், தீபக் ஹூடா, ஹென்ரிக்ஸ், ஷாருக் கான், ஃபேபியன் ஆலன், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - நிதீஷ் ராணா, சுப்மான் கில், ராகுல் திரிபாதி, ஈயோன் மோர்கன், தினேஷ் கார்த்திக், சுனில் நரைன் / ஷாகிப் அல் ஹசன், ஆண்ட்ரே ரஸ்ஸல், பாட் கம்மின்ஸ், வருண் சக்ரவர்த்தி, சிவம் மாவி, பிரசித் கிருஷ்ணா.

பிளிட்ஸ்பூல் ஃபேண்டஸி லெவன்

  • விக்கெட் கீப்பர்கள் - கே.எல். ராகுல், தினேஷ் கார்த்திக், நிக்கோலஸ் பூரன்
  • பேட்ஸ்மேன்கள் - நிதீஷ் ராணா, மயாங்க் அகர்வால், கிறிஸ் கெய்ல்
  • ஆல்ரவுண்டர்கள் - ஆண்ட்ரே ரஸ்ஸல் , தீபக் ஹூடா
  • பந்து வீச்சாளர்கள் - பாட் கம்மின்ஸ், அர்ஷ்தீப் சிங், ரவி பிஷ்னோய்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை