ஐபிஎல் 2021: தனி ஒருவனாக வெற்றியை பறித்த பொல்லார்ட்; மும்பை அபார வெற்றி!

Updated: Sun, May 02 2021 01:15 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 27ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. 

இதையடுத்து களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு மொயீன் அலி, ஃபாப் டூ பிளெஸிஸ், அம்பத்தி ராயுடு ஆகியோர்  அரைசதம் கடந்து இமாலய இலக்கை நிர்ணயிக்க உதவினர். 

இதன்மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 218 ரன்களை எடுத்தது. சிஎஸ்கேவில் அதிகபட்சமாக அம்பத்தி ராயுடு 72 ரன்களையும், மொயீன் அலி 58 ரன்களையும், டூ பிளெஸிஸ் 50 ரன்களையும் சேர்த்தனர். 

இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா, குயின்டன் டி காக் ஆகியோர் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். அதன்பின் 35 ரன்களில் ரோஹித் சர்மா ஆட்டமிழக்க, டி காக் 38 ரன்களில் விக்கெட்டை இழந்தார். 

அதன்பின் வந்த சூர்யகுமார் யாதவ் 3 ரன்களில் பெவிலியன் திரும்ப, அவரைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த பொல்லார்ட் - குர்னல் பாண்டியா இணை சிக்சர்களை பறக்க விட்டு அசத்தினார். இதில் கிரேன் பொல்லார்ட் 17 பந்துகளில் அரைசதம் கடந்து ஆட்டத்தின் போக்கை தன்வச படுத்தினார். 

இதற்கிடையில் குர்னால் பாண்டியா 32 ரன்களில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா 16 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த ஜிம்மி நீஷமும் ரன் ஏதுமின்றி பெவிலியனுக்கு திரும்பி ஏமாற்றமளித்தார்.

இருப்பினும் விடா முயற்சியை கைவிடாத கிரேன் பொல்லார்ட் இறுதிவரை போராடியது மட்டுமின்றி வெற்றியையும் மும்பை அணிக்காக பரிசளித்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி ஆட்டத்தின் கடைசி பந்தில் வெற்றி இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. 

இப்போட்டியில் இறுதிவரை போரடி அணிக்கு வெற்றியை தேடித்தந்த கிரேன் பொல்லார்ட் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை