இது நம்பமுடியாத ஒரு வெற்றி - விராட் கோலி !

Updated: Sat, Oct 09 2021 11:24 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 56ஆவது லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய டெல்லி அணியானது 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக துவக்க வீரர்கள் ப்ரித்வி ஷா 48 ரன்களும் தவான் 43 ரன்களும் குவித்தனர்.

அதனைத் தொடர்ந்து 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பெங்களூர் அணியானது ஆரம்பத்தில் படிக்கல் மற்றும் கோலி ஆகியோரை அடுத்தடுத்து இழந்து 6 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை பறிகொடுத்தது. பின்னர் டிவில்லியர்ஸ் 26 ரன்கள் குவித்தாலும் 55 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்தது. அதன் பின்னர் மூன்றாவது வரிசையில் இறங்கிய கே.எஸ்.பரத் மற்றும் 5 ஆவது வீரராக களமிறங்கிய மேக்ஸ்வெல் ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 20 ஓவர்களில் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் குவித்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர்.

அதிகபட்சமாக பாரத் 78 ரன்களும், மேக்ஸ்வெல் 51 ரன்களும் குவித்தனர். கடைசி ஓவரின் போது வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி ஒரு பந்தில் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆவேஷ் கான் வீசிய அந்த கடைசி பந்தில் சிக்சர் அடித்து பரத் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து வெற்றி குறித்து பேசிய ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி “நம்பமுடியாத ஒரு போட்டி. இந்த போட்டியில் நாங்கள் தோற்றாலும் கவலை இல்லை என்றாலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் டெல்லி அணியை வீழ்த்தியது மகிழ்ச்சி. இந்த தொடரில் இருமுறை அவர்களை நாங்கள் விழுத்தி உள்ளோம். டிவில்லியர்ஸ் தொடக்கத்தில் சிறப்பாக ஆடினாலும் பரத் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் நம்பமுடியாத அளவு இறுதிவரை களத்தில் நின்று அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பிளே ஆப் சுற்றுக்கு முந்தைய இந்த வெற்றி நிச்சயம் எங்கள் அணி வீரர்களுக்கு மிகுந்த நம்பிக்கை அளித்திருக்கும். மேலும் எந்த ஒரு கட்டத்திலும் இருந்தும் மீண்டு வந்து நாங்கள் வெற்றி பெற இந்த போட்டி உதவும்” என்று கூறினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை