ஐபிஎல் 2021: சாம்சன் அதிரடியில் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ராஜஸ்தான்!

Updated: Mon, Sep 27 2021 21:14 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 40ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. 

இதில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் எவின் லூயீஸ் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் - சஞ்சு சாம்சன் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. 

இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 36 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற அவரைத் தொடர்ந்து வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 4 ரன்களில் நடையைக் கட்டினார். 

இருப்பினும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த சஞ்சு சாம்சன் அரைசதம் கடந்து அசத்தினார். அவருடன் சேர்ந்து விளையாடிய மஹிபால் லமோரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். 

Also Read: இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணம், 2021

பின் சஞ்சு சாம்சன் 82 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தன் ராயல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களைச் சேர்த்தது. ஹைதராபாத் அணி தரப்பில் சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை