ஐபிஎல் 2021: மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை தகவல்!

Updated: Thu, Jul 29 2021 20:43 IST
Image Source: Google

நடப்பாண்டு கரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடத்தப்பட்டு வந்த ஐபிஎல் தொடர் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. 

இந்நிலையில் எஞ்சியுள்ள 29 போட்டிகளுக்கான அட்டவணை, நேரம் மற்றும் மைதாங்கள் ஆகியவற்றை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்து ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இத்தொடரின் விறுவிறுப்பை ஏற்படுத்தும் வகையில் முதல் போட்டியே பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி நான்கு வெற்றி, மூன்று தோல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலின் நான்காம் இடத்திலிருப்பது குறிப்பிடத்தக்கது. 

மும்பை இந்தியன்ஸ் போட்டி அட்டவணை 

  • 19 Sep 2021 - 07:30 PM - CSK vs MI - Dubai
  • 23 Sep 2021 - 07:30 PM - MI vs KKR - Abu Dhabi
  • 26 Sep 2021 - 07:30 PM - RCB vs MI - Dubai
  • 28 Sep 2021 - 07:30 PM - MI vs PBKS - Abu Dhabi
  • 2 Oct 2021 - 03:30 PM - MI vs DC - Sharjah
  • 5 Oct 2021 - 07:30 PM - RR vs MI - Sharjah
  • 8 Oct 2021 - 03:30 PM - SRH vs MI - Abu Dhabi
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை