கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின்போது தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் உலகின் பல முன்னணி வீரர்களை ஆட்டமிழக்க வைத்த நடராஜன் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் நெட் பவுலராக தேர்வானார். 

Advertisement

பின்பு ஆஸ்திரேலியா பயணித்த இந்திய அணியின் சில வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக நடராஜன் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

Advertisement

அதன் பின்பு இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து தொடரிலும், நடைபெற்று ஒத்தி வைக்கப்பட்ட ஐபிஎல் தொடரிலும் விளையாடினார். இந்த ஐபிஎல் தொடரின் பாதியிலேயே அவர் கால் மூட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி அறுவை சிகிச்சையை மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்து பெங்களூரு சென்ற அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மருத்துவர்களின் கண்காணிப்பில் மெல்ல மெல்ல பயிற்சிகளை தொடர்ந்தார்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அளித்த பேட்டியில் : மீதமுள்ள ஐபிஎல் தொடரில் விளையாட நான் நிச்சயம் தயாராகி விடுவேன் என்றும் அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது சன்ரைசர்ஸ் அணி வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி வரும் ஆகஸ்ட் மாதம் 31ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் பயணிக்கும் சன்ரைசர்ஸ் அணியுடன் நடராஜனும் இணைகிறார் என்று உறுதி செய்துள்ளார்கள். இதன் காரணமாக தற்போது மீண்டும் நடராஜன் இந்த ஐபிஎல் தொடரில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த சன்ரைசர்ஸ் அணி நடராஜனின் வருகையினால் நிச்சயம் சந்தோஷம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News