சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்குபவர் ருத்துராஜ் கெய்க்வாட். இலங்கைக்கு எதிரான இருபது ஓவர் தொடரின் போது ருத்துராஜ் கெய்க்வாட்க்கு காயம் ஏற்பட்டது. இதனால் இந்திய அணியிலிருந்து விலகினார்.

Advertisement

இதனையடுத்து ருத்துராஜ் கெய்க்வாட் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டார்.

Advertisement

இதனால் ருத்துராஜ் கெய்க்வாட் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுவது சந்தேகம் ஏற்பட்டது. இதற்கு தகுந்தார் போல் ருத்துராஜ் கெய்க்வாட் சிஎஸ்கே நடத்தும் பயிற்சி முகாமில் பங்கேற்கவில்லை. இதனால் இம்முறை ருத்துராஜ் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார் என்ற தகவல் வெளியாகியது.

அதன் பின்னர் ருத்துராஜ் கெய்க்வாட், ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் பங்கேற்க மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், ருத்துராஜ் கெய்க்வாட்க்கு எதிர்பார்த்தைவிட மிக விரைவாக காயம் குணமாகி வருகிறது. இதனால் அவர் உடல் தகுதியும் முன்னேறி வருகிறது.

இதனால், ருத்துராஜ் கெய்க்வாட் விரைவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு திரும்ப உள்ளார். நாளையோ அல்லது நாளை மறுநாளோ ருத்துராஜ் கெய்க்வாட் சூரத்துககு சென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயிற்சி முகாமில் பங்கேற்க உள்ளார். அங்கு அவருக்கு உடல் தகுதி சோதனை நடத்தப்படும்.

இதில் பேட்டிங் பயிற்சியின் போது சிறப்பாக செயல்பட்டால், வரும் 26ஆம் தேதி சிஎஸ்கே அணிக்காக முதல் போட்டியிலேயே அவர் பங்கேற்க உள்ளார். ருத்துராஜ் அணிக்கு திரும்புவதன் மூலம் சிஎஸ்கேவின் பலம் மேலும் அதிகரிக்கும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News