ஐபிஎல் 2022: ஹர்திக் அரைசதம்; ஆர்சிபிக்கு 169 டார்கெட்!

Updated: Thu, May 19 2022 21:29 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய தொடக்க வீரர் ஷுப்மன் கில் ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் கிளென் மேக்ஸ்வெல்லின் அபாரமான கேட்சின் மூலம் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த சஹா - மேத்யூ வேட் இணை அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இதில் வேட் 16 ரன்களுடன் விக்கெட்டை இழக்க, மறுபுறம் அதிரடியாக விளையாடிவந்த விருத்திமன சஹாவும் 31 ரன்களில் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா - டேவிட் மில்லர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின்னர் 34 ரன்கள் எடுத்திருந்த டேவிட் மில்லர் ஹசரங்கா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திவேத்தியா 2 ரன்கள் எடுத்ட்திருந்த நிலையில் ஹசில்வுட் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்டியா இந்த சீசனில் தனது 4ஆவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 168 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா 62 ரன்களைச் சேர்த்தார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை