அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என சிறந்த ஆல்ரவுண்டராக வலம்வந்த ஹர்திக் பாண்டியா, முதுகில் செய்த அறுவை சிகிச்சைக்கு பிறகு பந்துவீசமுடியாமல் திணறிவந்தார். அதனால் அவருக்கு இந்திய அணியிலும்  இடம் கிடைக்காமல் இருந்துவருகிறது.

Advertisement

கடந்த ஐபிஎல்லிலும் மும்பை இந்தியன்ஸுக்காக ஆடியபோது அவர் பந்துவீசவில்லை. கடந்த ஆண்டு நடந்த டி20 உலக கோப்பையிலும் அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இதற்கிடையே, அவருக்கு மாற்று ஆல்ரவுண்டராக வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக ஆடி இந்திய அணியில் இடம் பிடித்தார்.

Advertisement

இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் டி20 உலக கோப்பை நடக்கவுள்ள நிலையில், டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெற வேண்டுமென்றால், ஹர்திக் பாண்டியா மீண்டும் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங்கில் சிறப்பாக விளையாடி தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

அந்தவகையில், அதை செய்வதற்கு அவருக்கான சிறந்த வாய்ப்பாக ஐபிஎல் தான் பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா மீதுதான் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. அவர் பவுலிங் வீசுமளவிற்கு ஃபிட்னெஸை பெற்றுவிட்டாரா, எந்தளவிற்கு பந்துவீசுகிறார் என்பதெல்லாம் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், மும்பை அணி கழட்டிவிட்ட ஹர்திக் பாண்டியாவை குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கி அவரையே கேப்டனாக நியமித்ததால், கேப்டன்சி அழுத்தமும் அவருக்கு அதிகரித்தது.

ஆனால் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங், பவுலிங்குடன் கேப்டன்சியும் சிறப்பாக செய்தார். ஷமி முதல் பந்தில் ராகுலை வீழ்த்தியதிலிருந்தே லக்னோ அணி  மீது முழுவதுமாக அழுத்தம் போட்டு ஆதிக்கம் செலுத்த வைத்தார் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா. கேப்டனாக களத்திற்கு வந்த முதல் பந்தே வெற்றிகரமான டி.ஆர்.எஸ் எடுத்தார்.

பாண்டியா பந்துவீசுவாரா என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், அவரது 4 ஓவர்கள் முழு கோட்டாவையும் வீசினார் பாண்டியா. 140 கிமீ வேகத்தில் பந்துவீசி மிரட்டினார் பாண்டியா. எனவே அவர் பந்துவீசுமளவிற்கு முழு ஃபிட்னெஸை பெற்றுவிட்டார். பேட்டிங்கிலும் 33 ரன்கள் அடித்தார்.

Advertisement

பாண்டியா மீது இந்திய அணி நிர்வாகம், ரசிகர்கள் என அனைத்து தரப்பினரும் ஒரு கண் வைத்திருந்த நிலையில், பேட்டிங், பவுலிங், கேப்டன்சி என அனைத்திலும் பட்டைய கிளப்பி தனது கம்பேக்கை கன்ஃபாம் செய்துள்ளார் ஹர்திக் பாண்டியா.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News