ஐபிஎல் 2022: பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன் காட்டடி; ஆர்சிபிக்கு 210 டார்கெட்!

Updated: Fri, May 13 2022 21:23 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்றுவரும் 60ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்திவருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தொடக்க வீரர்கள் ஜானி பேர்ஸ்டோவ் - ஷிகர் தவான் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் தவான் 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார்.

ஆனாலும் மறுமுனையில் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோவ் 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். இதன்மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணி பவர் பிளேவில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 83 ரன்களைக் குவித்தது.

அதன்பின் பனுகா ராஜபக்ஷ ஒரு ரன்னில் ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஜானி பேர்ஸ்டோவ் 66 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதையடுத்து ஜோடி சேர்ந்த லியாம் லிவிங்ஸ்டோன் - மயங்க் அகர்வால் இணை ஓரளவிற்கு பார்ட்னர்ஷிப் அமைத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 

அதனைத் தொடர்ந்து மயங்க் அகர்வால் 19 ரன்னிலும், ஜித்தேஷ் 9 ரன்னிலும், ஹர்ப்ரித் பிரார் 7 ரன்னிலும் அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினர். 

ஆனாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய லியாம் லிவிங்ஸ்டோன் அரைசதம் கடந்து அசத்தினார். அதுமட்டும் இல்லாமல் ஹசில்வுட் வீசிய 19ஆவது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் என 24 ரன்களைக் குவித்து அசத்தினார்.

அதன்பின் 70 ரன்கள் எடுத்திருந்த லிவிங்ஸ்டோன், ஹர்ஷல் படேலின் கடைசி ஓவரில் விக்கெட்டை இழந்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 209 ரன்களைச் சேர்த்தது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை