ஐபிஎல் 2022 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்றைய 41ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக விலங்கிய குல்தீப் யாதவ் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார்.

Advertisement

அவர் 3 ஓவர்களை வீசி 14 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 4 ஓவரையும் அவர் வீசியிருந்தால் 5 விக்கெட்டை கைப்பற்றி இருக்கலாம். ஆனால் பந்து ஈரமாக இருந்ததால் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்கியதாக அணியின் கேப்டன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார்.

Advertisement

4 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் குல்தீப் யாதவ் 8 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இதனால் ஐபிஎல் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை சேர்ந்த சாஹால் உள்ளார். இவர் 8 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார்.

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றதன் மூலம் ஒரு சீசனில் அதிக முறை ஆட்ட நாயன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியலில் குல்தீப் யாதவ் இடம்பிடித்துள்ளார். 

ஒரு சீசனில் அதிக முறை ஆட்ட நாயன் விருது பெற்ற இந்திய வீரர்களின் பட்டியல்:

  • 5 விராட் கோலி - 2016
  • 4 குல்தீப் யாதவ்  - 2022
  • 4 ருதுராஜ் கெய்வாட் - 2021
  • 4 ரோகித் சர்மா - 2016
  • 4 அமித் மிஸ்ரா - 2013
  • 4 சச்சின் தெண்டுல்கர் -  2010
  • 4 யூசப் பதான் - 2008

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News