ஐபிஎல் 15ஆவது சீசனின் இன்றைய போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி கேப்டன் கேஎல் ராகுல் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

Advertisement

அதன்படி டெல்லி அணிக்கு பிரித்வி ஷாவும் டேவிட் வார்னரும் தொடக்க வீரர்களாக இறங்கினர். தொடக்கம் முதலே வழக்கம்போல அடித்து ஆடிய பிரித்வி ஷா, பவுண்டரிகளாக விளாசினார். அடித்து அனைவருக்கும் ஷோ காட்டும் டேவிட் வார்னரை மறுமுனையில் நிற்க வைத்து ஷோ காட்டினார் பிரித்வி ஷா. பவர்ப்ளேவை பயன்படுத்தி அதிரடியாக ஆடி அரைசதம் அடித்த பிரித்வி ஷா, 34 பந்தில் 61 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். அவர் ஆட்டமிழக்கும்போது டெல்லி அணியின் ஸ்கோரே 67 தான். அதில் 61 ரன்கள் பிரித்வி ஷா அடித்தது.

Advertisement

அதன்பின்னர் வார்னரை வெறும் 4 ரன்களுக்கு வீழ்த்திய ரவி பிஷ்னோய், ரோவ்மன் பவலை 3 ரன்களுக்கு அனுப்பிவைத்தார். அதன்பின்னர் ரிஷப் பந்த் - சர்ஃபராஸ் கானும் இணைந்து அடித்து ஆட முயற்சித்தனர். ஆனால் லக்னோ அணி பவுலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. வழக்கத்திற்கு மாறாக மிகவும் மந்தமாக ஆடிய ரிஷப் பந்த், ஆண்ட்ரூ டையின் பவுலிங்கில் மட்டும் சில பெரிய ஷாட்டுகளை ஆடினார். ஆனால் ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கௌதம், ஆவேஷ் கான் ஆகியோரின் பவுலிங்கில் ரிஷப் - சர்ஃபராஸ் கானால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

ரிஷப் பந்த் 36 பந்தில் 39 ரன்களும், சர்ஃபராஸ் கான் 28 பந்தில் 36 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 149 ரன்கள் மட்டுமே அடித்து டெல்லி கேபிடள்ஸ் அணி, 150 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.

இதையடுத்து இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு கேப்டன் கேஎல் ராகுல் - குயின்டன் டி காக் இணை சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் ராகுல் 24 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய டி காக் அரைசதம் கடந்தார்.

பின்னர் களமிறங்கிய எவின் லூயிஸ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட டி காக்கும் 80 ரன்களில் விக்கெட்டை இழந்தார். இதனால் இப்போட்டியில் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை இருக்கையின் நுனிக்கு அழைத்து வந்தது. 

Advertisement

இருப்பினும் குர்னால் பாண்டியா - தீபக் ஹூடா இணை பொறுப்பாக விளையாடி அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். இதன்மூலம் 19.4 ஓவர்களில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸை வீழ்த்தியது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News