ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டும் ‘எல் கிளாசிகோ’ - சிஎஸ்கே vs மும்பை இந்தியன்ஸ்!

Updated: Thu, Apr 21 2022 14:14 IST
IPL 2022: Pride, survival at stake as 'champions' Mumbai Indians, Chennai Super Kings lock horns in (Image Source: Google)

அது என்ன எல் கிளாசிகோ என்ற கேள்வி உங்களுக்கு ஏழலாம். ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து தொடரில் பார்சிலோனா அணியும், ரியல் மாட்ரிட் அணியும் மோதும் ஆட்டத்தை தான் எல் கிளாசிகோ என்று அழைப்பார்கள்.

2 அணிக்கும அவ்வளவு பெரிய ரசிகர்கள் பட்டாளம். அதே போல் ஐபிஎல் தொடரின் 2 வெற்றிக்கரமான அணிகள் மோதுவதால் இதற்கும் இந்த பெயர் வந்துவிட்டது.

இதுவரை நடைபெற்ற 14 சீசனில், சிஎஸ்கே, மும்பை அணியும் மட்டும் சேர்த்தால் 9 கோப்பைகளை வென்றுவிட்டன. அவ்வளவு ஆதிக்கம் செலுத்திய இந்த அணிகளுக்கு, ஐபிஎல் மெகா ஏலம் ஒரு பேர் இடியை தந்தது. 2 அணியும் கட்டிவைத்திருந்த கட்டமைப்பு உடைக்கப்பட்டது. இதன் விளைவாக இரு அணிகளும், ஐபிஎல் புள்ளி பட்டியலில் அடி பாதாளத்திற்கு தள்ளப்பட்டது.

எப்போதும் டாப் 2 அணிகளாக மோதும் சிஎஸ்கே, மும்பை அணிகள் இம்முறை நேர்மாறான சூழலில் சந்திக்கின்றன. இதில் இரு அணிகளுக்கும் பலத்தை விட பலவீனம் தான் அதிகமாக உள்ளன. மும்பை அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியை காப்பாற்றவில்லை. ஆனால் சென்னை அணிக்கு விக்கெட்டை வீழ்த்தும் வேகப்பந்துவீச்சாளர் என்று ஒருவரே இல்லை. பிராவோ மட்டும் தான் அணியின் மானத்தை காப்பாற்ற போராடுகிறார்.

மும்பை அணியில் சுழற்பந்துவீச்சாளர்கள் எதிரணியை நடுங்க வைக்க கூடிய வகையில் பந்துவீசுவதில்லை. இதுவே அந்த அணிக்கு பெரும் தலைவலியை தருகிறது. சிஎஸ்கே அந்த வகையில் மகீஷ் தீக்சனாவை கண்டுபிடித்துள்ளது. இருப்பினும் ஜடேஜா, மொயின் அலி தங்களது கட்டுக்கோப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தாமல் இருப்பது பின்னடைவை தருகிறது.

மும்பை அணியில் பெரிய குறை ரோகித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் தான். அது சரியானால், அந்த அணியின் பாதி பிரச்சினை முடிந்துவிடும். பிரவீஸ், சூர்யகுமார் யாதவ், பொலார்ட் ஆகியோர் அந்த அணியின் பலமாக விளங்குகின்றனர். சிஎஸ்கேவை பொறுத்தவரை எந்த ஒரு வீரரும் தொடர்ந்து ரன் அடிப்பதில்லை. ருத்துராஜ் கடந்த போட்டியில் அரைசதம் அடித்தாலும், அவர் எஞ்சிய போட்டியில் உத்தப்பாவுடன் அசத்தினால் மட்டுமே சிஎஸ்கே பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும்.

ஜடேஜா, துபே, தோனி, மொயின் அலி, ராயுடு ஆகியோர் பழைய ஃபார்ம்க்கு வந்தால் மட்டுமே சிஎஸ்கே தப்பிக்க முடியும். சிஎஸ்கே அணி தனது பந்துவீச்சு குறையை சரி செய்யாமல் விட்டு உள்ளது. குறிப்பாக கிறிஸ் ஜார்டனை அணியில் வைத்துவிட்டு, பிரிட்டோரியஸ்க்கு ஏன் வாய்ப்பு வழங்கவில்லை என்பது புரியாத புதிராக உள்ளது. இன்றைய ஆட்டத்திலும் ஜார்டன் இருந்தால், சிஎஸ்கே ரசிகர்கள் தொலைக்காட்சியை ஆஃப் செய்துவிட்டு, வேறு வேலையை பார்ப்பது நல்லது.

மும்பை அணியை பொறுத்தவரை அப்படி ஒரு குறை இல்லை. ஆனால் பிளேயிங் லெவனில் இருக்கும் வீரர்களும் சரியாக விளையாடினாலே அந்த அணிக்கு சிக்கல் இல்லை. மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும், ஒரு வேளை சென்னை தோற்றால் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா என்ற நிலை தான். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை