அடுத்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் விளையாடுவது உறுதி - ஜாகீர் கான்!
ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனையும், வழக்கம்போலவே தோல்வியுடன் தான் தொடங்கியது.
மும்பை இந்தியன்ஸ் அணி வீரரான சூர்யகுமார் யாதவ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரில் காயம் ஏற்பட்டது. அதனால் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் சிகிச்சையும் பயிற்சியும் எடுத்து வந்தார்.
இதையடுத்து காயத்திலிருந்து மீண்ட அவர், அண்மையில் மும்பை சென்றடைந்தார். ஆனால் 3 நாட்கள் தனிமைப்படுத்துதல் அவசியம் என்பதால், அதை முடித்துவிட்டு மும்பை அணியுடன் தற்போது இணைந்து உள்ளார்.
இதனை மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரான ஜாகீர்கான் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “சூர்யகுமார் யாதவ் ஒரு தக்கவைக்கப்பட்ட வீரர் மற்றும் இந்த பக்கத்தின் முக்கிய உறுப்பினராக இருந்து வருகிறார்.
மேலும் அவர் களம் இறங்குவதற்கு நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம். அடுத்த ஆட்டத்தில் அவர் கிடைப்பதைப் பொறுத்தவரை, ஆம், அவர்தான்” என்று தெரிவித்துள்ளார்.