ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கேகேஆர் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் கேப்டன் கேன் வில்லியம்சன் பந்துவீச்சை  தேர்வு செய்தார்.

Advertisement

முதலில் பேட்டிங் ஆடிய கேகேஆர் அணியின் தொடக்க வீரர்கள் ஆரோன் ஃபின்ச்(7) மற்றும் வெங்கடேஷ் ஐயர்(6) ஆகிய இருவருமே ஒற்றை இலக்கத்தில் வெளியேற, 3ம் வரிசையில் இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் களத்தில் நிற்க, 4ம் வரிசையில் களமிறங்கிய சுனில் நரைன் 6 ரன்னுக்கு நடையை கட்டினார். சிறப்பாக ஆடிய கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 28 ரன்னிலும், ஷெல்டான் ஜாக்சன் 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

Advertisement

அதிரடியாக ஆடிய நிதிஷ் ராணா அரைசதம் அடித்தார். அருமையாக பந்துவீசி வெங்கடேஷ் ஐயர் மற்றும் சுனில் நரைன் ஆகிய இருவரையும் வீழ்த்தியிருந்த நிலையில், அரைசதம் அடித்த நிதிஷ் ராணாவை 54 ரன்னுக்கு வெளியேற்றினார். அதன்பின்னர் டெத் ஓவரில் அடித்து ஆடிய ஆண்ட்ரே ரசல் 25 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 49 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

20 ஓவரில் 175 ரன்களை குவித்துள்ள கேகேஆர் அணி, 176 ரன்கள் என்ற சவாலான இலக்கை சன்ரைசர்ஸுக்கு நிர்ணயித்தது. 

இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியில் அபிஷேக் சர்மா, கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 

அதன்பின் ஜோடி சேர்ந்த ராகுல் திரிபாதி - ஐடன் மார்க்ரம் இணை அபார ஆட்டத்தை வெளீப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தியது.

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடந்து அசத்தினர். அதன்பின் 71 ரன்களில் திரிபாதி ஆட்டமிழக்க, மறுமுனையிலிருந்த ஐடன் மார்க்ரம் இறுதிவரை களத்தில் இருந்து சிக்சர் மூலம் ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை வீழ்த்தி, இந்த சீசனில் தனது 3ஆவது வெற்றியைப் பதிவுசெய்தது.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News