அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 16ஆவது சீசனுக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ளது. ஐபிஎல் 16ஆவது சீசனுக்கு முன், டிசம்பர் 23ஆம் தேதி கொச்சியில் மினி ஏலம் நடைபெறவுள்ளது. இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது.

Advertisement

இன்றோடு கெடு தேதி முடிவடைவதால் அனைத்து அணிகளும் அது குறித்த அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளன. சர்வதேச களத்தில் முத்திரை பதித்த பல முக்கிய வீரர்களுக்கு ஐபிஎல் அணி நிர்வாகங்கள் விடுவித்துள்ளன. இருந்தாலும் இதில் சில விடுவிப்புகள் வீரர்களுக்கான ஏல தொகையை குறைத்து, மீண்டும் அணியில் சேர்வதற்கான நடவடிக்கையாக கூட இருக்கலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

அப்படி அடுத்த சீசனுக்காக 10 ஐபிஎல் அணிகளும் தக்க வைத்துள்ள மற்றும் விடுவித்துள்ள வீரர்கள் முழு விவரத்தைப் பார்ப்போம்.

மும்பை இந்தியன்ஸ்

ஐந்து முறை ஐபிஎல் அரங்கில் சாம்பியன் படம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி மொத்தம் 13 வீரர்களை விடுவித்துள்ளது.

தக்கவைத்த வீரர்கள்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரமன்தீப் சிங், டிம் டேவிட், ஜஸ்பிரித் பும்ரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், குமார் கார்த்திகேயா சிங், ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், அர்ஜுன் டெண்டுல்கர், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால்.

Advertisement

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பொல்லார்ட், அன்மோல்பிரீத் சிங், ஆர்யன் ஜூயல், பசில் தம்பி, டேனியல் சாம்ஸ், ஃபாபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், மயங்க் மார்கண்டே, முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, ரிலே மெர்டித், சஞ்சய் யாதவ், டைமல் மில்ஸ்.

கைவசமுள்ள தொகை: ரூ.20.55 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

Advertisement

சென்னை சூப்பர் கிங்ஸ் 

தக்கவைத்த வீரர்கள்: தோனி, ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, சேனாபதி, ரவீந்திர ஜடேஜா, மொயின் அலி, மிட்செல் சான்ட்னர், டுவைன் பிரிட்டோரியஸ், ஷிவம் துபே, ஆர். ஹங்கர்கேகர், தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷனா, துஷார் தேஷ்பாண்டே, பிரசாந்த் சோலங்கி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கே.எம்.ஆசிப், நாராயண் ஜெகதீசன்.

Advertisement

கைவசமுள்ள தொகை: 20.45 கோடி ரூபாய்
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 

Advertisement

தக்கவைத்த வீரர்கள்: ராகுல் திரிபாதி, கிளென் பிலிப்ஸ், அபிஷேக் சர்மா, மார்க்ரம், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி நடராஜன், கார்த்திக் தியாகி, ஃபசல்ஹாக் பரூக்கி.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஜெகதீஷா சுச்சித், பிரியம் கார்க், ரவிக்குமார் சமர்த், ரொமாரியோ ஷெப்பர்ட், சவுரப் துபே, ஷான் அபோட், ஷஷாங்க் சிங், ஷ்ரேயாஸ் கோபால், சுஷாந்த் மிஸ்ரா, விஷ்ணு வினோத்.

Advertisement

கைவசமுள்ள தொகை: ரூ.42.25 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

பஞ்சாப் கிங்ஸ் 

தக்கவைத்த வீரர்கள்: ஷிகர் தவான் (கேப்டன்), ஷாருக்கான், ஜானி பேர்ஸ்டோ, பிரப்சிம்ரன் சிங், பனுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ராஜ் பவா, ரிஷி தவான், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா, அர்ஷ்தீப் சிங், பால்தேஜ் சிங், நாதன் எல்லிஸ், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், ஹர்ப்ரீத் ப்ரார்.

Advertisement

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: மயங்க் அகர்வால், ஒடியன் ஸ்மித், வைபவ் அரோரா, பென்னி ஹோவெல், இஷான் போரால், அன்ஷ் படேல், பிரேரக் மங்கட், சந்தீப் சர்மா, ரிட்டிக் சாட்டர்ஜி.

கைவசமுள்ள தொகை: ரூ.32.2 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

Advertisement

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 

தக்கவைத்த வீரர்கள்: ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), ரஹ்மானுல்லா குர்பாஸ், ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், நிதிஷ் ராணா, அன்குல் ராய், வெங்கடேஷ் ஐயர், ஷர்துல் தாக்கூர், டிம் சவுதி, பெர்குசன், உமேஷ் யாதவ், வருண் சக்கரவர்த்தி, ஹர்ஷித் ராணா.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பாட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், ஷிவம் மாவி, முகமது நபி, சமிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜீத் தோமர், ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ரசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

Advertisement

மீதமுள்ள தொகை: ரூ.7.05 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

குஜராத் டைட்டன்ஸ் 

Advertisement

தக்கவைத்த வீரர்கள்: சுப்மான் கில், டேவிட் மில்லர், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், அபினவ் மனோகர், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ராகுல் திவாட்டியா, ரஷித் கான், விஜய் சங்கர், சாய் கிஷோர், ஜெயந்த் யாதவ், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், நூர் அகமது, தர்ஷன் நல்கண்டே, பிரதீப் சங்வான்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ரஹ்மானுல்லா குர்பாஸ், பெர்குசன், டொமினிக் டிரேக்ஸ், குர்கீரத் சிங், ஜேசன் ராய், வருண் ஆரோன்.

Advertisement

கைவசமுள்ள தொகை: ரூ.19.25 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 3

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 

தக்கவைத்த வீரர்கள்: கே.எல்.ராகுல் (கேப்டன்), ஆயுஷ் பதோனி, கரண் சர்மா, மனன் வோஹ்ரா, டிகாக், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிருஷ்ணப்ப கவுதம், தீபக் ஹூடா, கைல் மேயர்ஸ், குர்ணால் பாண்டியா, அவேஷ் கான், மொஹ்சின் கான், மார்க் வுட், மயங்க் யாதவ், ரவி பிஷ்னோய்.

Advertisement

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஆண்ட்ரூ டை, அங்கித் ராஜ்புட், துஷ்மந்த சமீரா, எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர், மனிஷ் பாண்டே, ஷாபாஸ் நதீம்.

கைவசமுள்ள தொகை: ரூ.23.35 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

Advertisement

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 

தக்கவைத்த வீரர்கள்: டுப்ளசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் பட்டிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்சல் படேல், டேவிட் வில்லி, லோம்ரோர், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசல்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ரூதர்ஃபோர்ட்.

Advertisement

கைவசமுள்ள தொகை: ரூ.8.75 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 2

ராஜஸ்தான் ராயல்ஸ் 

Advertisement

தக்கவைத்த வீரர்கள்: சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஜெய்ஸ்வால், ஷிம்ரோன் ஹெட்மையர், தேவ்தத் படிக்கல், ஜோஸ் பட்லர், துருவ் ஜூரல், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, டிரெண்ட் போல்ட், மெக்காய், நவ்தீப் சைனி, குல்தீப் சென், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், கே.சி. கரியப்பா, அஸ்வின்.

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: அனுனய் சிங், கார்பின் போஷ், மிட்செல், ஜேம்ஸ் நீஷம், கருண் நாயர், நாதன் கவுல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஷுபம் கர்வால், தேஜஸ் பரோகா.

Advertisement

கைவசமுள்ள தொகை: ரூ.13.2 கோடி
மீதமுள்ள வெளிநாட்டு வீரர்களுக்கான இடங்கள்: 4

டெல்லி கேபிடல்ஸ் 

தக்கவைத்த வீரர்கள்: ரிஷப் பந்த் (கேப்டன்), டேவிட் வார்னர், பிருத்வி ஷா, ரிபால் படேல், ரோவ்மேன் பவல், சர்பராஸ் கான், யாஷ் துல், மிட்செல் மார்ஷ், லலித் யாதவ், அக்சர் படேல், அன்ரிச் நோர்க்யா, சேத்தன் சக்காரியா, கமலேஷ் நாகர்கோட்டி, கலீல் அகமது, லுங்கி இங்கிடி, முஸ்தபிசுர் ரஹ்மான், அமன் கான், குல்தீப் யாதவ், பிரவீன் துபே, விக்கி ஓஸ்ட்வால்.

Advertisement

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஷர்துல் தாக்கூர், டிம் செய்ஃபெர்ட், அஷ்வின் ஹெப்பர், ஸ்ரீகர் பாரத், மன்தீப் சிங்.

கைவசமுள்ள தொகை: 19.45 கோடி ரூபாய்
மீதமுள்ள வெளிநாட்டு வீர்களுக்கான இடங்கள்: 2

Advertisement

அணிகள் வீரர்களை விடுவித்துள்ளதன் மூலம் தங்கள் கைவசம் உள்ள தொகையை பயன்படுத்தி மினி ஏலத்தில் புதிய வீரர்களை ஏலம் எடுக்கும். இதில் சில வீரர்களை அணிகள் தங்களுக்குள்ள பரஸ்பரம் டிரான்ஸ்பராக மாற்றிக் கொண்டுள்ளன.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News