16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. இதையடுத்து மீதமுள்ள ஒரு இடத்திற்கு மும்பை, ராஜஸ்தான், பெங்களூரு அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 

Advertisement

அதன் ஒருபகுதியாக மும்பை இந்தியன்ஸ் அணி இன்று நடைபெற்ற தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நெருக்கடியான சூழலில், டாஸை வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தார். 

Advertisement

இதையடுத்து ஹைதராபாத அணியின் தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் மற்றும் விவ்ராந்த் சர்மா இணை களமிறங்கினர். இன்னிங்ஸின் தொடக்கம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் மளமளவென ஸ்கோரை உயர்த்தியதுடன், 100 ரன்களை பார்ட்னர்ஷிப் முறையிலும் சேர்த்தனர். இதுதான் ஹைதராபாத அணியின் தொடக்க வீரர்கள் இந்த சீசனில் தொடக்க வீரர்கள் அடித்து அதிகபட்சம பார்ட்னர்ஷிப்பாகவும் அமைந்தது. 

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவருமே அரைசதம் கடக்க, இவர்களைப் பிரிக்க முடியாமல் மும்பை அணி வீரர்கள் தடுமாறினர். அதன்பின் 2 சிக்சர், 9 பவுண்டரி என 69 ரன்களைச் சேர்த்திருந்த விவ்ராந்த் சிங் விக்கெட்டை இழக்க, அவரைத் தொடர்ந்து மறுமுனையில் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மயங்க் அகர்வால் 4 சிக்சர், 8 பவுண்டரி என 83 ரன்களைச் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார். 

ஆனால் அதன்பின் களமிறங்கிய கிளென் பிலீப்ஸ் ஒரு ரன்னிலும், ஹென்ரிச் கிளாசென் 18 ரன்களிலும், ஹாரி ப்ரூக் ரன்கள் ஏதுமின்றியும் அடுத்தடுத்து ஆகாஷ் மதுவால் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தனர். இறுதியில் கேப்டன் ஐடன் மார்க்ரம் சிக்சர் அடித்து இன்னிங்ஸை முடித்து வைத்தார். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 200 ரன்களைக் குவித்தது. மும்பை அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய ஆகாஷ் மதுவால் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரோஹித் சர்மா - இஷான் கிஷன் இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் இஷான் கிஷன் 14 ரன்களில் ஆட்டமிழ்ழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் ரோஹித்துடன் இணைந்த கேமரூன் க்ரீன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். 

Advertisement

தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் அரைசதம் கடக்க அணியின் வெற்றியும் உறுதியானது. பின் 8 பவுண்டரி, ஒரு சிக்சர் என 56 ரன்களை எடுத்திருந்த ரோஹித் சர்மா ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அண்யின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர்.

மறுமுனையில் கேமரூன் க்ரீன் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 47 பந்துகளில் சதமடித்ததுடன், மும்பை அணிக்கும் வெற்றியைத் தேடிக்கொடுத்தார். இதமூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 18 ஓவர்களிலேயே இலக்கை எட்டியதுடன், 8 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்ததுடன், பிளே ஆஃப் சுற்றுகான ரேஸிலும் நீடிக்கிறது. 

இப்போட்டியில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் க்ரீன் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 100 ரன்களுடன் களத்தில் இருந்தார். இன்று நடைபெறவுள்ள மற்றொரு போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டால் மும்பை அணி நேரடியாக பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நடப்பாண்டு ஐபிஎல் தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேற்றப்பட்டுள்ளது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News