ஐபிஎல் 2023: ரஸல், ரிங்கு அதிரடியில் பஞ்சாபை வீழ்த்தியது கேகேஆர் த்ரில் வெற்றி!

Updated: Mon, May 08 2023 23:24 IST
IPL 2023: Kolkata Knight Riders beat Punjab Kings by 6 Wickets! (Image Source: Google)

16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளதி. இதில் இன்று நடைபெற்ற 53ஆவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் கேட்ச் முலம் அவுட் ஆனார்.

பின்னர் களமிறங்கிய லியாம் லிவிங்ஸ்டன் 9 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ஜிதேஷ் சர்மா 21 ரன்னில் அவுட் ஆனார். சற்று நிலைத்து நின்று விளையாடிய கேப்டன் ஷிகர் தவான் 47 பந்துகளில் 57 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

அடுத்துவந்த சாம் கரன் 4 ரன்னிலும், ரிஷி தவான் 19 ரன்னிலும் அவுட் ஆனார். இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் குவித்தது. கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய ஷாருக் கான் 8 பந்துகளில் 21 ரன்களுடனும், ஹர்பிரீத் 9 பந்தில் 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கேகேஆர் தரப்பில் அந்த அணியின் வருண் சக்ரவர்த்தி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இதையடுத்து கடின இலக்கை நோக்கி கேகேஆர் அணியின் தொடக்க வீரர்களாக ரஹ்மனுல்லா குர்பாஸ் - ஜேசன் ராய் இணை களமிறங்கினர். இதில் ரஹ்மனுல்லா குர்பாஸ் 15 ரன்களில் ஆட்டமிழக்க, மறுமுனையில் அதிரடியாக விளையாடிய ஜேசன் ராயும் 38 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். 

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் நிதீஷ் ரானா - வெங்கடேஷ் ஐயர் இணை பொறுப்பான ஆட்டத்த வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பின் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் ஐயர் 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, மறுமுனையில் அரைசதம் கடந்த நிதிஷ் ரானா 51 ரன்களில் ஆட்டமிழந்தார். 

இதனால் கடைசி 3 ஓவர்களில் கேகேஆர் அணி வெற்றிக்கு 36 ரன்கள் தேவை என்ற நிலையில் இணைந்த ஆண்ட்ரே ரஸல் - ரிங்கு சிங் இணை அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.  இருவரும் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்சர்களுமாக விளாசி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். 

இதன்மூலம் கேகேஆர் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டியதுடன், 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆண்ட்ரே ரஸல் 42 ரன்களையும், ரிங்கு சிங் 21 ரன்களையும் சேர்த்தனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை