நற்பெயரை வைத்து மட்டுமே இனியும் பிரித்வி ஷாவால் தொடர முடியாது - மைக்கேல் வாகன் சாடல்!

Updated: Fri, Apr 21 2023 20:28 IST
IPL 2023: Michael Vaughan says Prithvi Shaw can’t keep going on reputation! (Image Source: Google)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், முதல் 5 போட்டிகளிலும் தோல்வியை தழுவிய டெல்லி கேபிடள்ஸ் அணி, கேகேஆருக்கு எதிரான 6ஆவது போட்டியில் முதல் வெற்றியை பெற்றது.  இந்த சீசனில் டெல்லி கேபிடள்ஸ் அணி தொடர் தோல்விகளை தழுவுவதற்கு முக்கியமான காரணம், படுமோசமான பேட்டிங் தான். 

குறிப்பாக தொடக்க வீரரான பிரித்வி ஷாவிடமிருந்து இதுவரை ஒரு  நல்ல இன்னிங்ஸ் கூட வரவில்லை. டேவிட் வார்னர் மட்டுமே டெல்லி அணியில் பேட்டிங்கில் நம்பிக்கையளிக்கிறார். மிட்செல் மார்ஷ், ஃபிலிப் சால்ட் ஆகிய வெளிநாட்டு வீரர்களும் சோபிக்கவில்லை. பெரிய இன்னிங்ஸ் ஆடவில்லை என்றாலும், பவர்ப்ளேயில் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுப்பார் பிரித்வி ஷா. ஆனால் இந்த சீசனில் அவர் படுமோசமாக பேட்டிங் ஆடிவருகிறார். 

இந்த சீசனில் முதல் 6 போட்டிகளில் பிரித்வி ஷா அடித்த ரன்கள் - 13, 12, 7, 0, 15 மற்றும் 0 ஆகும். மொத்தமாகவே வெறும் 47 ரன்கர்ள் மட்டுமே அடித்துள்ளார். அதுவும் வெறும் 117 என்ற மோசமான ஸ்டிரைக் ரேட்டில் ஆடியிருக்கிறார். எனவே டெல்லி கேபிடள்ஸ் அணி வெற்றி பெற வேண்டுமென்றால், பிரித்வி ஷா அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தாக வேண்டும். அவரது சிறப்பான பேட்டிங் அவருக்கும் தேவை; அணிக்கும் தேவை.

பிரித்வி ஷா தொடர்ந்து சொதப்பிவரும் நிலையில், பிரித்வி ஷா குறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், “இந்த சீசனின் தொடக்கத்தில் மார்க் உட் பிரித்வி ஷாவுக்கு பந்துவீசினார். அவர் கால்களை நகர்த்தவே இல்லை. ஷார்ட் பிட்ச் பந்துக்காக காத்திருந்தார். ஆனால் லைனை சரியாக பிடிக்காமல் ஆடி அவுட்டானார். பிரித்வி ஷாவுக்கு ரன்கள் வேண்டும். அவர் ஸ்கோர் செய்தாக வேண்டும். கடந்த காலங்களில் ஆடியதன் அடிப்படையிலான நற்பெயரை வைத்து மட்டுமே இனியும் பிரித்வி ஷாவால் தொடர முடியாது” என்று எச்சரித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை