ஐபிஎல் 2023: மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Sat, Apr 22 2023 14:42 IST
Image Source: CricketNmore

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் வார இறுதியான இன்றைய தினத்தின் இரண்டாவது லீக் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்கொள்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டி, இந்திய நேரப்படி மாலை 7.30 மணிக்கு தொடங்குகிறது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - மும்பை இந்தியன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ்
  • இடம் - வான்கடே கிரிக்கெட் மைதானம், மும்பை
  • நேரம் - இரவு 7.30 மணி

போட்டி முன்னோட்டம்

ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நடப்பு தொடரில் 5 போட்டிகளில் விளையாடி, மூன்றில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளது. ரோஹித் சர்மா, இஷான் கிஷான் தொடர்ந்து மும்பை அணிக்கு நல்ல தொடக்கம் அளிக்க சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட் மற்றும் வதேரா ஆகியோர் அதிரடி காட்ட அணிவகுத்து நிற்கின்றனர்.

அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரெண்ட்ரோஃப், ரிலே மெரிடித் என அனுபவம் குறைந்த வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டுமே இருப்பினும், பியூஷ் சாவ்லா சுழற்பந்துவீச்சில் நம்பிக்கை அளிக்கிறார். கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலும் வென்ற மும்பை அணி, இன்றை போட்டியிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களுக்குள் நுழைய முனைப்பு காட்டி வருகிறது. 

அதேசமயம் ஷிகர் தவான் தலைமையிலான் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு தொடரில் 6 போட்டிகளில் விளையாடி 3 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளது. வெற்றி, தோல்வி என மாறி மாறி பெற்று வருவதே, இந்த அணியின் நிலைத்தன்மையை விளக்குகிறது. தவான் மட்டுமே தொடர்ந்து நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த ஷாருக்கான், சாம் கரரன், லிவிங்ஸ்டன் ஆகியோர் இதுவரை பெரிதாக சோபிக்கவில்லை. 

பந்துவீச்சில் காகிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ராகுல் சஹார் ஆகியோருடன் சாம் கரண், ஹர்ப்ரீத் பிரார் ஆகியோரும் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் கடைசியாக விளையாடிய பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தோல்வியுற்றது நினைவுகூறத்தக்கது.

மைதானம் எப்படி?

வான்கடே மைதானம் வழக்கம் போல் பேட்ஸ்மேன்களுகான சொர்க்கபூமியாக இருக்கும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. டாஸ் வெல்லும் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே விரும்பும். முதலில் பேட்டிங் செய்யும் அணி வெற்றி பெற விரும்பினால் குறைந்தபட்சமாகவே 180 ரன்களையாவது குவித்தால் தான் போராடவே முடியும்.

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 29
  • மும்பை இந்தியன்ஸ் - 15
  • பஞ்சாப் கிங்ஸ் - 14

உத்தேச லெவன் 

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா (கே), இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், திலக் வர்மா, டிம் டேவிட், நேஹால் வதேரா, ஹிருத்திக் ஷோக்கீன், பியூஷ் சாவ்லா, அர்ஜுன் டெண்டுல்கர், ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்.

பஞ்சாப் கிங்ஸ் - அதர்வா டைடே/ ஷிகர் தவான், பிரப்சிம்ரன் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், மேட் ஷார்ட், ஜிதேஷ் ஷர்மா, சாம் கரன், ஷாருக்கான், ககிசோ ரபாடா, அர்ஷ்தீப் சிங், ஹர்ப்ரீத் பிரார், ராகுல் சாஹர்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜிதேஷ் சர்மா, இஷான் கிஷன், பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, டிம் டேவிட், திலக் வர்மா
  • ஆல்-ரவுண்டர்கள் - மேட் ஷார்ட், சாம் கரன், கேமரூன் கிரீன்
  • பந்துவீச்சாளர்கள் - பியூஷ் சாவ்லா, அர்ஷ்தீப் சிங்

கேப்டன்/துணைக்கேப்டன் - இஷான் கிஷன், மேத்யூ ஷார்ட், கேமரூன் க்ரீன், பிரப்சிம்ரன் சிங்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை