ஐபிஎல் 2022: முதல் செட்டில் மயங்க் அகர்வால்; இரண்டாவது செட்டில் சாம் கரண், பென் ஸ்டோக்ஸ்!
ஐபிஎல் 2022 தொடருக்கான மினி ஏலம், வரும் 23ஆம் தேதி பகல் 2 மணியிலிருந்து நடைபெறவுள்ளது. இதற்காக மொத்தம் 991 வீரர்கள் பதிவு செய்து வைத்திருந்தார்கள். இருப்பினும், அவர்களில் 369 வீரர்களை மட்டுமே ஐபிஎல் நிர்வாகிகள் தேர்வு செய்துள்ளனர்.இதுதவிர 10 அணிகளும், தங்களுக்கு தேவையான இளம் வீரர்களை ஏலப் பட்டியலில் சேர்க்க கோரிக்கைவிட்டுள்ளது.
அந்த வகையில் 36 பேர் பேர் கூடுதலாக சேர்க்கப்பட்டு மொத்தம் 405 பேர் மினி ஏலத்தில் பங்கேற்க உள்ளனர். இதில் 273 பேர் இந்திய வீரர்களாகவும், 132 பேர் வெளிநாட்டு வீரர்களாகவும் இருக்கிறார்கள். இதில் 2 கோடி ரூபாயை அடிப்படையாகக் கொண்ட 19 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 10 அணிகளிடமும் 206.5 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. அதிகபட்சமாக சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 42.25 கோடி ரூபாய் மீதம் இருக்கிறது. குறைந்த பட்சமாக கொல்கத்தா அணியிடம் 7.05 கோடி ரூபாய் உள்ளது.
கொல்கத்தா அணியிடம் இவ்வளவு கம்மியான பணம் இருக்க காரணம் இருக்கிறது. ட்ரேடிங் மூலம் இவர்கள் ஷர்தூல் தாகூர், லாக்கி பெர்குசன், ஓபனர் குர்பஸ் ஆகியோரை வாங்கிவிட்டார்கள். இதனால், மினி ஏலத்தில் இவர்கள் உள்ளூர் வீரர்களை வாங்கினாலே போதும்.
இந்நிலையில், மினி ஏலத்தில் வீரர்களின் வரிசை என்ன என்பது குறித்தும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி முதல் நபராக மயங்க் அகர்வாலை ஏலம் விட உள்ளனர். தொடர்ந்து ஹேரி ப்ரூக்ஸ், அஜிங்கிய ரஹானே போன்றவர்களை ஏலம் விட உள்ளனர்.
முதல் செட்: மயங்க் அகர்வால், ஹேரி ப்ரூக், அஜிங்கியா ரஹானே, ஜோ ரூட், ரைலி ரூசோவ், கேன் வில்லியம்சன்.
இரண்டாவது செட்: சாம் கரன், கேமரூன் கிரீன், ஷகிப் அல் ஹசன், ஜேசன் ஹோல்டர், சிக்கந்தர் ராசா, பென் ஸ்டோக்ஸ்.
மூன்றாவது செட்: டாம் பாண்டன், லிட்டன் தாஸ், ஹென்ரிச் கிளாசென், குசால் மெண்டிஸ், நிக்கோலஸ் பூரன், பிலிப் சால்ட்.
நான்காவது செட்: கிறிஸ் ஜோர்டன், ஆடம் மில்னே, ஜெய் ரிச்சர்ட்சன், இஷாந்த் சர்மா, ரீஸ் டாப்லி, ஜெய்தேவ் உனாத்கட்.
ஐந்தாவது செட்: முஜிப் உர் ரஹ்மான், மயங்க் மார்கண்டே, ஆதில் ரஷித், ஆடம் ஸாம்பா, அகில் ஹோசைன்.