16ஆவது சீசன் ஐபிஎல் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் முதல் அணியாக 'பிளே-ஆப்' சுற்றுக்கு தகுதி பெற்று இருப்பதுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்துள்ளது. டெல்லி கேப்பிட்டல்ஸ், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. எஞ்சிய 3 இடத்துக்கு கடும் போட்டி நிலவுகிறது.

Advertisement

அந்தவகையில் இன்று நடைபெறும் 66ஆவது லீக் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்து சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்ளவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு உள்ளது என்பதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Advertisement

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ்
  • இடம் - ஹி.பி. கிரிக்கெட் மைதானம், தர்மசாலா
  • நேரம் - இரவு 7.30 மணி 

போட்டி முன்னோட்டம்

நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான், பஞ்சாப் ஆகிய அணிகள் தலா 13 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி,7 தோல்விகளை பதிவு செய்து 12 புள்ளிகளை பெற்றுள்ளன. இதில் ராஜஸ்தான் அணி நிகர ரன் ரேட்  0.140 என்ற அடிப்படையில் பட்டியலில் 6ஆவது இடத்திலும், பஞ்சாப் அணி (-0.308 ரன் ரேட்டுடன் 8ஆவது இடம் வகிக்கிறது. இன்றைய ஆட்டத்தில் தோல்வி அடையும் அணி தொடரில் இருந்து வெளியேறும். மாறாக வெற்றி பெறும் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு என்பது மற்ற அணிகளின் முடிவை பொறுத்து அமையும்.

பஞ்சாப் வெற்றி பெற்றாலும் அந்த அணியின் ரன் ரேட் குறைவாக இருப்பதால் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது என்பது கடினமான பணியாகவே இருக்கும். வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்க ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் அதிக ரன்களை விட்டுக்கொடுப்பது பலவீனமாக உள்ளது. வேகப்பந்து வீச்சாளர்களான காகிசோ ரபாடா, சாம் கரண், அர்ஷ்தீப் சிங், நேதன் எலிஸ் ஆகியோர் ஓவருக்கு சராசரியாக 10 ரன்களுக்கு மேல் தாரை வார்ப்பது ஒட்டுமொத்த அணிக்கும் அழுத்தத்தை உருவாக்குகிறது.

Advertisement

ரபாடா இந்த சீசன் முழுவதுமே தனது திறமைக்கு ஏற்ற அளவிலான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. அதேவேளையில் அர்ஷ்தீப் சிங்கை கடந்த சில ஆட்டங்களாக பவர்பிளேவிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் பயன்படுத்தாதது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏனெனில் தொடக்க ஓவர்களில் தனது ஸ்விங்காலும் இறுதிக்கட்ட ஓவர்களில் யார்க்கர்களாலும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கொடுக்கும் திறன் கொண்டவர் அர்ஷ்தீப் சிங். இந்த சீசனில் முதல் பாதியில் தொடர்ச்சியாக சிறந்த செயல்திறனை வெளிப்படுத்திய அர்ஷ்தீப் சிங், பிற்பாதியில் உத்வேகத்துடன் செயல்படுவதில் தேக்கம் அடைந்தார். 

இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடி உள்ளதால்சிறந்த செயல்திறனை வெளிப்படுத்துவதில் அர்ஷ்தீப் சிங் தீவிரம் காட்டக்கூடும். டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவண் கடைசி ஓவரில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பிரீத் பிரார்ரை வீசச் செய்தது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. அந்த ஓவரில் டெல்லி அணி 23 ரன்களை வேட்டையாடி இருந்தது. இந்த ஆட்டத்தில் 214 ரன்கள் இலக்கை விரட்டிய பஞ்சாப் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது.

இரு அணிகளுக்கும் இடையிலான வித்தியாசமாக ஹர்பிரீத் பிரார் வீசிய கடைசி ஓவர் அமைந்திருந்தது. பேட்டிங்கில் ஷிகர் தவண் கடைசி இரு ஆட்டங்களிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தவில்லை. இன்றைய ஆட்டம்முக்கியத்துவம் என்பதால் பேட்டிங்வரிசையை அவர், முன்னின்று வழிநடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

ராஜஸ்தான் அணியானது இந்த சீசனை சிறப்பான வகையில் தொடங்கியது. தனது முதல் 5 ஆட்டங்களில் 4இல் வெற்றி பெற்றிருந்தது. ஆனால் அடுத்து விளையாடிய 7 ஆட்டங்களில் ராஜஸ்தான் அணியால் 2 வெற்றிகளை மட்டுமே பெற முடிந்தது. கடைசியாக சொந்த மண்ணில் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 172 ரன்களை துரத்தியபோது 59 ரன்களுக்கு சுருண்டு மோசமான தோல்வியை பதிவு செய்தது.

இதில் இருந்து மீண்டு வந்து வலுவான செயல்திறனை வெளிப்படுத்துவதில் ராஜஸ்தான் அணி கவனம் செலுத்தக்கூடும். ஜோஸ் பட்லர் சில பரபரப்பான இன்னிங்ஸ்களை விளையாடினார். ஆனால் அவரிடம் இருந்து தொடர்ச்சியான செயல்பாடு இல்லை. கடந்த இரு ஆட்டங்களிலும் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேறிய அவர், மீண்டும் பார்முக்கு திரும்புவதில் கவனம் செலுத்தக்கூடும். 

இதேபோன்று யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேப்டன் சஞ்சு சாம்சன் யுவேந்திர சாஹல் ஆகியோரும் ஃபார்முக்கு திரும்புவதில் முனைப்பு காட்டக்கூடும். அவர்கள் தவிர ஷிம்ரான் ஹெட்மையர், ரவிச்சந்திரன் அஸ்வின், சந்தீப் சர்மா உள்ளிட்டோரும் தங்களது ஃபார்முக்கு திரும்பி அணிக்கு தேவையான வெற்றியை ஈட்டி தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 24
  • பஞ்சாப் கிங்ஸ் - 11
  • ராஜஸ்தான் ராயல்ஸ் -14

உத்தேச லெவன்

பஞ்சாப் கிங்ஸ்: பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான் (கே), லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, சிக்கந்தர் ராசா, ஜிதேஷ் சர்மா, சாம் கரன், ஷாருக் கான், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், நாதன் எல்லிஸ்

Advertisement

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கே), ஜோ ரூட், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்.

ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், பிரப்சிம்ரன் சிங்
  • பேட்ஸ்மேன்கள் - ஷிகர் தவான், ஷிம்ரோன் ஹெட்மையர், யஷஸ்வி ஜெய்ஸ்வாஸ் (கேப்டன்)
  • ஆல்-ரவுண்டர்கள் - லியாம் லிவிங்ஸ்டோன் (துணை கேப்டன்), சாம் கரன்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், நாதன் எல்லிஸ்

*இந்த ஃபேண்டஸி டீம் என்பது ஆசிரியரின் புரிதல், பகுப்பாய்வு மற்றும் உள்ளுணர்வை அடிப்படையாகக் கொண்டது. உங்கள் அணியை உருவாக்கும் போது குறிப்பிடப்பட்ட புள்ளிகளைக் கருத்தில் கொண்டு கவனமாக முடிவெடுக்கவும்.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News