ஐபிஎல் 2023: டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ரவீந்திர ஜடேஜா!

Updated: Wed, Apr 12 2023 22:06 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இதில் எம்எஸ் தோனி சென்னை அணியை 200ஆவது போட்டியில் தலைமை தாங்கினார். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட அணியை 200 போட்டிகளில் கேப்டன்ஷிப் செய்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்த அவருக்கு முன்னாள் பிசிசிஐ தலைவர் மற்றும் சென்னை அணியின் உரிமையாளர் ஸ்ரீனிவாசன் சிறப்பு நினைவு பரிசு வழங்கி கௌரவித்தார்.

இதையடுத்து இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி முதலில் பந்துவீசுவதாக தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தானுக்கு யஎஸ்எஸ்வி ஜெய்ஸ்வால் 10 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தாலும் அடுத்து வந்த தேவதூத் படிக்கல் இம்முறை அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக பவர் பிளே ஓவர்களை பயன்படுத்தி அசத்திய அவர் மற்றொரு தொடக்க வீரர் ஜோஸ் பட்லருடன் இணைந்து 2வது விக்கெட்டுக்கு 77 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ராஜஸ்தானை வலுப்படுத்திய போது ரவீந்திர ஜடேஜாவின் சுழலில் 5 பவுண்டரியுடன் 38 (26) ரன்களில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அத்தோடு நிற்காத ஜடேஜா அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சனையும் கிளீன் போல்ட்டாக்கி டக் அவுட்டாக்கினார். இதையடுத்து ஜோஸ் பட்லர் 52 ரன்களில் ஆட்டமிழக்க,  மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக செயல்பட்ட சிம்ரோன் ஹெட்மயர் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 30 ரன்கள் எடுத்து நல்ல ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ராஜஸ்தான் 175/8 ரன்கள் எடுத்தது. 

சென்னை சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா, ஆகாஷ் சிங் மற்றும் துஷார் தேஷ்பாண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இப்போட்டியில் எடுத்த 2 விக்கெட்டுகளையும் சேர்த்து உள்ளூர் டி20, ஐபிஎல் மற்றும் சர்வதேச டி20 என அனைத்து வகையான டி20 போட்டிகளையும் சேர்த்து தன்னுடைய 200ஆவது விக்கெட்டையும் வீழ்த்தி புதிய மைல்களையும் ரவீந்திர ஜடேஜா தொட்டுள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை