ஐபிஎல் 2023: ரிக்கி பண்டிங்கை கடுமையாக சாடிய சேவாக்!

Updated: Sun, Apr 16 2023 20:47 IST
IPL 2023: Ricky Ponting Should Take The Blame For Delhi's Disastrous Start, Says Virender Sehwag (Image Source: Google)

நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாடி 5 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியடைந்து மிகவும் மோசமான நிலையில் உள்ளது. அணியின் கேப்டன் ரிஷப் பந்த் சாலை விபத்தில் படுகாயம் அடைந்ததால் அவரால் இந்த ஐபிஎல் சீசன் விளையாட முடியவில்லை. ஆகையால் டேவிட் வார்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர் தலைமையில் விளையாடிய 5 போட்டிகளில் 3 போட்டிகள் வெளி மைதானத்திலும் இரண்டு போட்டிகள் டெல்லி மைதானத்திலும் நடைபெற்றது.

சொந்த மைதானமான டெல்லி மைதானத்தில் விளையாடிய 2 போட்டியிலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தோல்வியை தழுவியிருப்பது கூடுதல் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த தொடர்ச்சியான தோல்விகளுக்கு ரிக்கி பாண்டிங் முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும். ஏனெனில் இளம் வீரர்களை வைத்துக்கொண்டு பிளே-ஆப் மற்றும் பைனலுக்கு சென்றுள்ளோம் என்று மார்தட்டிக்கொண்ட அவர் தான் இந்த தோல்விகளுக்கும் பொறுப்பேற்பது சரியாக இருக்கும் என்று கடுமையாக விமர்சித்து இருக்கிறார் முன்னாள் இந்திய வீரர் வீரேந்திர சேவாக். 

இந்த தொடர் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள வீரேந்திர சேவாக், “அணியின் தோல்விக்கு பயிற்சியாளர்தான் பொறுப்பு. ரிக்கி பாண்டிங் பயிற்சியின் கீழ் டெல்லி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. ஆண்டுதோறும் பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறுகிறது. அணி வெற்றி பெற்றால் அதற்கான பொறுப்பை அவர்தான் பெறுகிறார். தோல்வியின்போதும் அப்படித்தான்.

வெற்றி என்றால் தான் சொந்தம் கொண்டாடவும், தோல்வி என்றால் பிறர்தான் காரணம் என குறை கூறவும் இது இந்திய அணி அல்ல. ஐபிஎல் அணிகளைப் பொறுத்தவரை வீரர்களை திறம்பட மேனேஜ் செய்வது மிகவும் அவசியம். அதன் மூலம் அவர்களுக்கு நம்பிக்கை கொடுக்க முடியும். நடப்பு சீசனில் தங்களது சரிவில் இருந்து மீள்வது எப்படி என தெரியாமல் டெல்லி குழம்பி இருப்பதாக நான் கருதுகிறேன்” என தெரிவித்துள்ளார்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை