ஐபிஎல் 2023: நான்கு மாதங்களுக்கு பின் ரசிகர்கள் மத்தியில் தோன்றிய ரிஷப் பந்த்!

Updated: Tue, Apr 04 2023 22:27 IST
Image Source: Google

கடந்த டிசம்பர் சாலை விபத்தில் படுகாயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ரிஷப் பண்ட், கிட்டத்தட்ட 18 மாதங்கள் கிரிக்கெட்டில் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். மெல்லமெல்ல குணமடைந்து தற்போது நடக்கும் அளவிற்கு வந்திருக்கிறார் ரிஷப் பந்த். இந்த வருடம் ஐபிஎல் சீசனில் ரிஷப் பந்த் இல்லாததால் டேவிட் வார்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு கேப்டனாக விளையாடி வருகிறார்.

இந்த சீசனில் ரிஷப் பந்த் விளையாடவில்லை என்றாலும், முடிந்தவரை டெல்லி மைதானத்தில் நடக்கும் அனைத்து போட்டிகளுக்கும் அவரை அழைத்துவர முயற்சிப்போம் என்று டெல்லி ரசிகர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக பேசினார் டெல்லி கேப்பிட்டல்ஸ் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்.

டெல்லி அணி இந்த சீசனின் முதல் போட்டியை லக்னோவில் விளையாடியது. இரண்டாவது லீக் போட்டியை இன்று டெல்லியில் விளையாடி வருகிறது. இப்போட்டியின் நடுவே டெல்லி மைதானத்தில் இருந்த ரசிகர்கள் “எங்களுக்கு ரிஷப் பந்த் வேண்டும்” என்று கரகோசம் எழுப்பினர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே டெல்லி மைதானத்திற்குள் வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார் ரிஷப் பந்த். கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு, இவரை மைதானத்தில் பார்த்த மகிழ்ச்சியில் ரசிகர்களும் கரகோஷம் எழுப்பினார்கள். இக்காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு, டேவிட் வார்னர் 37 ரன்கள், அக்சர் பட்டேல் 36 ரன்கள் மற்றும் சர்ப்ராஸ் கான் 30 ரன்கள் அடித்து நம்பிக்கை அளித்தனர். இருப்பினும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சமி மற்றும் நட்சத்திர பவுலர் ரஷித் கான் இருவரும் நன்றாக கட்டுப்படுத்தியதால் டெல்லி அணியால் பெரிய ஸ்கோர் அடிக்க முடியவில்லை. இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 163 ரன்களை மட்டுமே இலக்காக நிர்ணனயித்துள்ளது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை