சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும் - ரோஹித் சர்மா!

Updated: Sun, Apr 09 2023 11:38 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி தோல்வியை தழுவியது. இதன் மூலம் நடப்பு சீசனில் மும்பை அணி தொடர்ந்து இரண்டு முறை தோல்வியை அடைந்து இருக்கிறது.சொந்த மண்ணில் வெற்றி பெறலாம் என மும்பை இந்தியன்ஸ் அணி நினைத்த நிலையில் அதற்கு தோனி படை முட்டுக்கட்டை போட்டு உள்ளது.

இந்த நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து பேசிய கேப்டன் ரோஹித் சர்மா, “நாங்கள் இன்றைய ஆட்டத்தில் நல்ல தொடக்கத்தை அளித்தோம். ஆனால் அதன் பிறகு எங்களுடைய வீரர்கள் எங்களுடைய தொடக்கத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. வான்கடே மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமாக தான் இன்றைய ஆட்டத்திலும் இருந்தது.

நாங்கள் ஒரு 30, 40 ரன்கள் குறைவாக அடித்து விட்டோம். எங்களுடைய இன்னிங்ஸின் நடு ஓவர்களில் நாங்கள் அதிரடியாக விளையாடி இருக்க வேண்டும். இதற்காக நான் சிஎஸ்கே அணியின் சுழற் பந்துவீச்சாளர்களை பாராட்டுகிறேன். அவர்கள் எங்களுக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தார்கள். எங்கள் அணி வீரர்கள் தைரியமாக விளையாட வேண்டும்.

எதிரணியின் பந்து வீச்சு மீது தாக்குதல் நடத்த வேண்டும். அப்படிப்பட்ட வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இளம் வீரர்கள். அவர்களுக்கு நாங்கள் ஆதரவு கொடுத்து திறமையை வெளிப்படுத்த துணையாக இருப்போம். அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் தங்களது பொறுப்பை உணர்ந்து விளையாட வேண்டும். முதலில் நான் நன்றாக விளையாட வேண்டும்.

ஐபிஎல் தொடரின் தன்மை நமக்கு தெரியும். அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றி பெறவில்லை என்றால் பிறகு மிகவும் கடினமாக மாறிவிடும். நாங்கள் இரண்டு போட்டிகளில் தான் தற்போது தோற்று இருக்கிறோம். இருப்பினும் தொடர் வெற்றிகளை பெற முயற்சி செய்வோம். நாங்கள் மீண்டும் வெற்றி பாதைக்கு செல்வோம் என நம்புகிறேன். நாங்கள் ட்ரெஸ்ஸிங் ரூமில் மேற்கொள்ளும் பிளான்கள் களத்தில் செயல்படுத்த முடியவில்லை.

கடந்த தொடர் எங்களுக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. நாங்கள் ஐந்து கோப்பையை வென்ற பிறகும் இந்த சீசனில் நாங்கள் புதியதாக தான் தொடங்கி இருக்கிறோம். ஐபிஎல் தொடரில் இம்முறை அனைத்து அணிகளும் திறமை வாய்ந்தவையாக இருக்கிறது. எனவே நாம் சிறப்பாக விளையாடினால் தான் மற்ற அணிகளை வீழ்த்த முடியும். இந்த இரண்டு போட்டிகள் முடிந்து விட்டது. இதனை நம்மால் மாற்ற முடியாது. இதிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு தைரியமாக களத்தில் செயல்பட வேண்டும்” என தெரிவித்துள்ளார். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை