ஐபிஎல் 2023: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்!

Updated: Wed, Apr 19 2023 11:21 IST
IPL 2023, RR vs LSG Dream11 Team: Jos Buttler or KL Rahul? Check Fantasy XI (Image Source: CricketNmore)

ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசன் நாளுக்கு நாள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 26ஆவது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸும், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. 

மேலும், மூன்றாண்டுகளுக்கு பின் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. 

போட்டி தகவல்கள்

  • மோதும் அணிகள் - ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
  • இடம் - சவாய் மான்சிங் மைதானம், ஜெய்ப்பூர்
  • நேரம் - இரவு 7.30 மணி 

போட்டி முன்னோட்டம் 

இந்தாண்டு ஐபிஎல் சீசனில் பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக திகழும் ராஜஸ்தான் ராயல்ஸ் இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி, ஒரு தோல்வி என்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருக்கிறது. ஜோஸ் பட்லர், ஜெய்ஸ்வால் ஆகிய தொடக்க ஆட்டக்காரர்கள் அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

அதே நேரத்தில் அவர்கள் இருவரும் சோபிக்க தவறினாலும் கூட, தங்களால் சாதிக்க முடியும் என்பதை முந்தைய குஜராத்துக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன், ஹெட்மையர் ஆகியோரது அதிரடி அரைசதத்தின் மூலம் நிரூபித்து காட்டினர். பேட்டிங்கில் ஜோஸ் பட்லர் , ஜெய்ஸ்வால், சாம்சன், ஹெட்மையர், தேவ்தத் படிக்கல், பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின், டிரென்ட் போல்ட் வலு சேர்க்கிறார்கள். நடப்பு தொடரில் முதல் முறையாக சொந்த ஊரான ஜெய்ப்பூரில் கால்பதிப்பதால் கூடுதல் உற்சாகத்துடன் விளையாடுவார்கள்.

கேஎல்  ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 3 வெற்றி, 2 தோல்விகளுடன் 6 புள்ளிகள் எடுத்து புள்ளிப்பட்டியளின் 2ஆவது இடத்தில் இருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் கடைசி ஓவரில் தோற்ற லக்னோ அணி வெற்றிப்பாதைக்கு திரும்பும் முனைப்புடன் வியூகங்களை தீட்டி வருகிறது.

சவால்மிக்க ராஜஸ்தான் அணியின் வெற்றிப்பயணத்துக்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்றால் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் லக்னோ ஒருங்கிணைந்து மிரட்ட வேண்டியது அவசியமாகும். லக்னோ அணியில் விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் இன்னும் களம் இறக்கப்படவில்லை. இன்றைய ஆட்டத்தில் கைல் மேயர்சை நீக்கிவிட்டு டி காக்கை சேர்ப்பது குறித்து அந்த அணி நிர்வாகம் பரிசீலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் ஃபார்முக்கு திரும்பியுள்ளது அந்த அணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. பந்துவீச்சில் மார்க் வுட், ரவி பிஸ்னோய், குர்னால் பாண்டியா, ஆவேஷ் கான் ஆகியோரும் இருப்பது வலுசேர்க்கிறது. 

நேருக்கு நேர்

  • மோதிய போட்டிகள் - 02
  • ராஜஸ்தான் ராயல்ஸ் - 01
  • லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் -01

உத்தேச லெவன் 

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சஞ்சு சாம்சன் (கே), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மையர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், ஆடம் ஜம்பா, சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - கே.எல். ராகுல் (கே), கைல் மேயர்ஸ், தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோய்னிஸ், குர்னால் பாண்டியா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் பதோனி, அவேஷ் கான், யுத்வீர் சிங் சரக், மார்க் வூட், ரவி பிஷ்னோய்.

ஃபேண்டஸி லெவன் 

  • விக்கெட் கீப்பர்கள் - ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், நிக்கோலஸ் பூரன்
  • பேட்டர்ஸ் – கேஎல் ராகுல், ஷிம்ரோன் ஹெட்மியர்
  • ஆல்ரவுண்டர்கள் - ரவிச்சந்திரன் அஷ்வின், கைல் மேயர்ஸ்
  • பந்துவீச்சாளர்கள் - யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட் / சந்தீப் சர்மா, மார்க் வூட், ரவி பிஷ்னோய்

கேப்டன்/துணைகேப்டன்: ஜோஸ் பட்லர், கேஎல் ராகுல், சஞ்சு சாம்சன், கைல் மேயர்ஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை