16ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் பந்துவீச்சை தேர்வு செய்தார். 

Advertisement

அதன்படி, முதலில் பேட்டிங் செய்ய வந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு யாரும் சரிவர விளையாடவில்லை. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் மற்றும் 57 ரன்கள் எடுக்க 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் வந்தது. இதை எடுத்து எளிமையான இலக்கை நோக்கி களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு இளம்வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் இருவரும் துவக்கம் தர வந்தார்கள்.

Advertisement

ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்ததால் இந்த முறை முதல் ஓவரை கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ரானா கையில் எடுத்தார். அவர் இந்த முடிவுக்காக பின்பு நிறைய வருத்தப்பட்டு இருப்பார். அவர் வீசிய முதல் ஓவரில் 6, 6, 4, 2, 4, 4 என்று ஜெய்ஸ்வால் 26 ரன்கள் குவித்து மிரட்டினார். 

தொடர்ந்து விளையாடிய அவர் ஹர்ஷித் ராணா வீசிய ஓவரில் மூன்று பந்துகளில் 1, 4, 6 என ரன்கள் எடுத்தார். அடுத்து சர்துல் தாக்கூர் வீசிய மூன்றாவது ஓவரில் 4, 4, 4, 1 என்று ரன்கள் எடுத்து 13 பந்தில் தனது அரை சதத்தை நிறைவு செய்தார்.

அவரது இந்த அரைசதம் ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக அடிக்கப்பட்ட அரை சதம் ஆகும். இதற்கு முன்பு 14 பந்துகளில் கே எல் ராகுல் மற்றும் பேட் கம்மின்ஸ் இருவரும் அடித்திருக்கிறார்கள். உலக அளவில் மொத்தமான டி20 கிரிக்கெட்டில் இது நான்காவது அதிவேக அரை சதம் ஆகும். இதற்கு முன்பு 12 பந்துகளில் யுவராஜ் சிங், கிறிஸ் கெய்ல், ஹஸ்ரதுள்ளா ஸஸாய் ஆகியோர் அரை சதம் அடித்திருக்கிறார்கள்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News