ஐபிஎல் 2024: 12 வீரர்களை கழட்டிவிட்ட கேகேஆர்!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கடந்த இரண்டு ஐபிஎல் தொடர்களில் புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடம் மட்டுமே பெற்று வருகிறது. இந்த நிலையில், அந்த அணி அதிரடியாக 12 வீரர்களை அணியில் இருந்து நீக்கி உள்ளது. அணியில் இருந்த 25 வீரர்களை 12 வீரர்களை அனுப்பி இருப்பதால் தற்போது பாதி அணி மட்டுமே உள்ளது.
அணியை மாற்றி 2024 ஐபிஎல் தொடரிலாவது எப்படியாவது கோப்பை வெல்லலாம் அல்லது குறைந்தபட்சம் பிளே ஆஃப் சுற்றுக்காவது செல்லலாம் என கணக்கு போட்டு இதை செய்துள்ளது கொல்கத்தா அணி. 12 வீரர்களை நீக்கிய பின் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கையிருப்பில் 32.70 கோடி உள்ளது. ஆனால், எட்டு வீரர்களை மட்டுமே அனுப்பிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் 32.10 கோடி கையிருப்பு உள்ளது.
இரண்டு அணிகளும் கிட்டத்தட்ட ஒரே அளவு பணத்தை கையில் வைத்துள்ளதால் ஏலத்தில் சிஎஸ்கே - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே கடும் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேகேஆர் அணி விடுவித்த வீரர்கள் - ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், ஷர்துல் தாக்கூர், நாராயண் ஜெகதீசன், மந்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்
கேகேஆர் அணி தக்க வைத்த வீரர்கள் - ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரஹ்மானுல்லா குர்பாஸ், வெங்கடேஷ் ஐயர், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், ஹர்ஷித் ராணா, வருண் சக்ரவர்த்தி, அனுகுல் ராய், ரிங்கு சிங், வைபவ் அரோரா, சுயாஷ் சர்மா, குல்வந்த் கெஜ்ரோலியா, மன்தீப், ஜேசன் ராய்