ஐபிஎல் 2024 மினி ஏலம்: பாட் கம்மின்ஸை முந்தி புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

Updated: Tue, Dec 19 2023 16:26 IST
ஐபிஎல் 2024 மினி ஏலம்: பாட் கம்மின்ஸை முந்தி புதிய வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்! (Image Source: Google)

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னெள சூப்பர் ஜெயிண்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய 10 அணிகளும் இந்த மினி ஏலத்தில் பங்கேற்றுள்ளனர்.

மொத்தம் 77 இடங்களுக்கு 333 வீரர்கள் ஏலத்தில் தங்களின் பெயர்களை கொடுத்துள்ளனர். அதில், 214 இந்திய வீரர்கள், 119 வெளிநாட்டு வீரர்கள் ஆவர். இன்று நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலியா அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரராக பாட் கம்மின்ஸ் சாதனைப் படைத்திருந்தார்.

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், கம்மின்ஸை விட அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். அவரது ஆரம்ப விலையான ரூ. 2 கோடியிலிருந்து நடைபெற்ற இந்த ஏலத்தின் தொடக்கத்தில் மும்பை மற்றும் டெல்லி அணிகள் கடுமையாக போட்டியிட்டன. அதன்பின் ஏலத்தில் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்த நைட் ரைடர்ஸ் அணிகள் மாறி மாறி ஏலம் கேட்க அவரது விலையிம் கூடியது. 

இறுதியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24.75 கோடிக்கு மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் வாங்கி ரசிகர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. இதன்மூலம் ஐபில் தொடர் வரலாற்றில் அதிக விலைக்கு ஏலம் எடுக்க வீரர் எனும் பாட் கம்மின்ஸின் சாதனையை சில மணி நிமிடங்களில் மிட்செல் ஸ்டார்க் முறியடித்து புதிய வரலாறு படைத்துள்ளார்.  

இதுவரை ஐபிஎல்-இல் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர்கள்: 

  • மிட்செல் ஸ்டார்க்- ரூ. 24.75 கோடி (கேகேஆர்)
  • பாட் கம்மின்ஸ் ரூ.20.5 கோடி (எஸ்ஆர்எச்)
  • சாம் கரன் ரூ.17.5 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
  • கேமரூன் கிரீன் ரூ.17.50 (மும்பை இந்தியன்ஸ்)
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை