ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது குஜராத் டைட்டன்ஸ்!

Updated: Sun, Mar 17 2024 23:07 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான சீசனின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் அனைத்து அணிகளும் தொடரில் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்துள்ளனர். மேலும் இத்தொடர் தொடங்க இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.

முன்னதாக கடந்த இரண்டு ஐபிஎல் சீசன்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வழிநடத்திய ஹர்திக் பாண்டிய இந்தாண்டு டிரேடிங் முறையில் மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டதுடன், அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். இதன் காரணமாக குஜராத் டைட்டன்ஸ் அணியின் புதிய கேப்டனாக இளம் நட்சத்திர வீரர் ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டார். 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் தலைமையில் களமிறங்கும் குஜராத் டைட்டன்ஸ் அணி தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிவித்துள்ளது. அதன்படி குஜராத் டைட்டன்ஸ் அணியின் இந்த புதிய ஜெர்ஸிகான அறிவிப்பை அந்த அணி நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கங்களில் காணொளியாக பதிவிட்டுள்ளது. 

குஜராஜ் டைட்டன்ஸ்:டேவிட் மில்லர், ஷுப்மன் கில் (கே), மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, கேன் வில்லியம்சன், அபினவ் மனோகர், சாய் சுதர்ஷன், தர்ஷன் நல்கண்டே, விஜய் சங்கர், ஜெயந்த் யாதவ், ராகுல் திவேத்தியா, முகமது ஷமி, நூர் அஹ்மது, சாய் கிஷோர், ரஷித் கான், ஜோஷுவா லிட்டில், மோகித் சர்மா, அஸ்மத்துல்லா ஓமர்சாய், உமேஷ் யாதவ், ஷாருக் கான், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, மனவ் சுதாகர், ஸ்பென்சர் ஜான்சன், ராபின் மின்ஸ்.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை