17ஆவது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தியது. கொல்கத்தாவிலுள்ள ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரண் முதலில் பந்துவீசுவதாக அறிவித்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. இன்றைய போட்டிகான இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. 

Advertisement

இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வழக்கம்போல் சுனில் நரைன் - பிலிப் சால்ட் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரும் இணைந்து அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸர்களை விளாசிதள்ள கேகேஆர் அணி முதல் 6 ஓவர்களிலேயே விக்கெட் இழப்பின்றி 76 ரன்களைக் குவித்தது. அதன்பின் தொடர்ந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த சுனில் நரைன் 23 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார். அதேபோல் மறுபக்கம் அதிரடியாக விளையாடி வந்த பில் சால்ட்டும் 25 பந்துகளில் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

Advertisement

இப்போட்டியில் இருவரும் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் முதல் விக்கெட்டிற்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தும் அசத்தினர். பின் 9 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் என 71 ரன்கள் சேர்த்த நிலையில் சுனில் நரைன் தனது விக்கெட்டை இழக்க, மறுபக்கம் 6 பவுண்டரி, 6 சிக்ஸர்கள் என 75 ரன்கள் குவித்த நிலையில் பில் சால்ட்டும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். பின்னர் ஜோடி சேர்ந்த வெங்கடேஷ் ஐயர் - ஆண்ட்ரே ரஸல் இணையும் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாச அணியின் ஸ்கோரும் மளமளவென உயர்ந்தது. 

அதன்பின் 2 பவுண்டரி, 2 சிக்ஸர்களை அடித்து 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்ட்ரே ரஸல் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் கைப்பற்றினார். இதையடுத்து களமிறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் தனது அதிரடியாக விளையாடி 10 பந்துகளில் ஒரு பவுண்டரி 3 சிக்ஸர்கள் என 28 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். அதன்பின் களமிறங்கிய ரிங்கு சிங் 5 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதன்பின் களமிறங்கிய ரமந்தீப் சிங் ஒரு சிக்ஸருடன் 6 ரன்களைச் சேர்த்த நிலையில், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வெங்கடேஷ் ஐயர் 3 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 39 ரன்களைச் சேர்த்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களைச் சேர்த்தது. பஞ்சாப் கிங்ஸ் அணி அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும், சாம் கரண், ஹர்ஷல் படேல், ராகுல் சஹால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதையடுத்து 262 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News