ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்தியன் பிரீமியர் லீக் தொடர் வெற்றிகரமாக 16 சீசன்களை கடந்து 17ஆவது சீசனை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அதன்படி வரும் மார்ச் 22ஆம் தேதில் தொடங்கும் இத்தொடரானது மே 26ஆம் தேதி முடிவடையவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

Advertisement

ஏற்கெனவே இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு இது கடைசி ஐபிஎல் தொடராக கூட இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுவது அந்த அணி மீது கூடுதல் கவனத்தை திருப்பியுள்ளது. அதன்படி இதுவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய அனைத்து தொடரிலும் அணியை வழிநடத்தியுள்ல எம் எஸ் தோனி. இதுவரை 5 முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார்.

Advertisement

இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக கோப்பைகளை வென்ற கேப்டன் எனும் ரோஹித் சர்மாவின் சாதனையையும் மகேந்திர சிங் தோனி சமன்செய்துள்ளார். மேலும் நடப்பு சீசனிலும் சிஎஸ்கே அணிக்கு கோப்பையை வென்று கொடுத்து தோனி தனது ஓய்வு முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்புகள் உள்ளன. இந்நிலையில் மகேந்திர சிங் தோனியின் சமூக வலைதள பதிவு ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

அவர் தனது பதிவில், “புதிய சீசனில் ஒரு புதிய ரோலிற்காக காத்திருக்க முடியவில்லை. காத்திருங்கள்” என்று பதிவுசெய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தோனியின் புதிய ரோல் என்னவாக இருக்கும் என ஆலோசனையில் ஈடுபட தொடங்கியுள்ளனர். ஏனெனில் இதுவரை ஐபிஎல் தொடரில் அணியின் கேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும், அணியின் பினீஷராகவுமே தோனியை ரசிகர்கள் கண்டுள்ளனர். 

 

ஆனால் அவர் தனது பதிவில் புதிய ரோல் என குறிப்பிட்டுள்ளதால், ஒருவேளை தனது பேட்டிங் ஆர்டரை மாற்றி டாப் ஆர்டரில் களமிறங்கவுள்ளாரா? என சிந்தித்து வாருகின்றனர். ஏனெனில் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் டெவான் கான்வே தனது காயம் காரணமாக மே மாதம் வரை கிரிக்கெட் விளையாட முடியாத நிலையில், தோனியின் இந்த பதிவானது பல்வேறு ஆலோசனைகளுக்கு வழிவகுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News