மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் போட்டி மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்து லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணியில் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார், 

Advertisement

அடுத்து களமிறங்கிய மார்கஸ் ஸ்டொய்னிஸ் 28 ரன்களிலும், தீபக் ஹூடா 11 ரன்களிலும் விக்கெடை இழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின் களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் கேப்டன் கேஎல் ராகுலுடன் இணைந்து அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் தங்கள் அரைசதங்களை பதிவுசெய்து அசத்தினர். 

Advertisement

அதன்பின் 75 ரன்களில் நிக்கோலஸ் பூரன் விக்கெட்டை இழக்க, 55 ரன்கள் எடுத்திருந்த கேஎல் ராகுலும் தனது விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இதனையடுத்து களமிறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆயூஷ் பதோனி 22 ரன்களையும், குர்னால் பாண்டியா 12 ரன்களையும் சேர்க்க லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்களைச் சேர்த்தது. மும்பை தரப்பில் நுவான் துஷாரா, பியூஷ் சாவ்லா தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் அதிரடியாக விளையாடி அந்த நிக்கோலஸ் பூரன் ஒரே ஓவரில் 23 ரன்களைக் குவித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இன்னிங்ஸின் 15 ஆவது ஓவரை அர்ஜுன் டெண்டுல்கர் வீச, அந்த ஓவரின் முதலிரண்டு பந்துகளையும் நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களுக்கு பறக்கவிட்டு தனது அரைசதத்தைப் பதிவுசெய்தார்.

 

அதன்பின் காயம் காரணமாக அர்ஜுன் பாதியிலேயே வெளியேற அந்த ஓவரின் மீதமிருந்த பந்துகளை நெஹால் வதேரா வீசினார். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாத நிக்கோலஸ் பூரன் அடுத்தடுத்து பவுண்டரியும், சிக்ஸரையும் விளாசி ஐந்தாவது பந்தில் சிங்கிள் எடுத்தார். இதன்மூலம் நிக்கோலஸ் பூரன் அந்த ஓவரின் முதல் 5 பந்துகளில் 23 ரன்களைக் குவித்து அசத்தினார். அக்காணொளியானது வைரலாகி வருகிரது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News