ஐபிஎல் 2024: புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தியது பஞ்சாப் கிங்ஸ்!

Updated: Sat, Mar 16 2024 21:17 IST
Image Source: Google

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடவுள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான சீசனின் முதல் போட்டியானது சென்னை சேப்பாக் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

இதனால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. அதேசமயம் அனைத்து அணிகளும் தொடரில் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்துள்ளனர். மேலும் இத்தொடர் தொடங்க இன்னும் சில நாள்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். 

இந்நிலையில் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் ஷிகர் தவான் தலைமையில் களமிறங்கும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாடவுள்ளது. அதன்படி தீவிரமாக தயாராகி வரும் பஞ்சாப் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடருக்கான தங்களது புதிய ஜெர்சியை இன்று அறிவித்துள்ளது. 

 

அதன்படி இன்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பஞ்சாப் கிங்ஸ் அணியின் துணை உரிமையாளர் பிரீத்தி ஜிந்தா, பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் ஷிகர் தவான் ஆகியோர் புதிய ஜெர்சியை அறிமுகம் செய்து வைத்தனர். இந்நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணியைச் சேர்ந்த சக வீரர்களும் மற்றும் அணியின் பயிற்சியாளர்களும் உடனிருந்தனர்.

பஞ்சாப் கிங்ஸ் அணி: ஷிகர் தவான்(கேப்டன்), ஜானி பேர்ஸ்டோவ், பிரப்சிம்ரன் சிங், ஜிதேஷ் சர்மா, ஹர்ப்ரீத் பாட்டியா, ரைலீ ரூஸோவ், ஷஷாங்க் சிங், லியாம் லிவிங்ஸ்டோன், அதர்வா டைடே, ரிஷி தவான், சாம் கரண், சிக்கந்தர் ரஸா, சிவம் சிங், கிறிஸ் வோக்ஸ், அசுதோஷ் சர்மா, விஸ்வநாத் சிங், தனய் தியாகராஜன், ஹர்ஷல் படேல், ஹர்பிரீத் பிரார், அர்ஷ்தீப் சிங், ககிசோ ரபாடா, நாதன் எல்லிஸ், ராகுல் சாஹர், வித்வத் கவேரப்பா, பிரின்ஸ் சவுத்ரி.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை