ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி விளையாடியாது. அதன்படி இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணியானது அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் ஆகியோரது உதவியுடன் 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களைச் சேர்த்தது. 

Advertisement

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய சிஎஸ்கே அணியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களில் விக்கெட்டை இழந்து ஏமாற்றமளிக்க, மறுபக்கம் அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா 37 ரன்களிலும், அஜிங்கியா ரஹானே 27 ரன்களையும், டேரில் மிட்செல் 22 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். 

Advertisement

பின்னர் இணைந்த ஷிவம் தூபே - ரவீந்திர ஜடேஜா இணை பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இதன்மூலம் 18.4 ஓவர்களில் சிஎஸ்கே அணி இலக்கை எட்டியதுடன் 6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்சிபி அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெதிவுசெய்து அசத்தியது. இப்போட்டியின் வெற்றிக்கு காரணமாக இருந்த சிஎஸ்கே வீரர் முஸ்தஃபிசூர் ரஹ்மான் ஆட்டநாயகன் விருதை வென்றார். 

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான ரச்சின் ரவீந்திரா அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 15 பந்துகளில் 3 சிச்கர்கள், 3 பவுண்டரிகள் என 37 ரன்களைச் சேர்த்து அசத்தினார். இந்நிலையில் தனது அறிமுக போட்டியிலேயே அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ரச்சின் ரவீந்திராவிற்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் அனில் கும்ப்ளே தனது பாராட்டை தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவில் நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை தொடரில் ரச்சின் ரவீந்திரான் பேட்டிங், பந்துவீச்சு மட்டுமல்லாது களத்திலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் அவர் சிஎஸ்கே அணிக்காக மிகக்குறைந்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் நடப்பு சீசனில் மிகச்சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளார். பேட்டிங் வரிசையில் முதலிடத்தில் இருக்கும் டெவான் கான்வேவின் இடத்தை நிரப்புவது எளிதல்ல.  ஆனால் ரச்சின் அதனை செய்துள்ளார். அவர் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக மட்டுமல்லாமல், சுழற்பந்து வீச்சுக்கு எதிராகவும் அவர் சிறப்பாக விளையாடினார்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News