முதல் ஓவரிலேயே யஷஸ்வி விக்கெட்டை வீழ்த்திய சாம் கரண் - வைரல் காணொளி!

Updated: Wed, May 15 2024 20:16 IST
Image Source: Google

கௌகாத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து பஞ்சாப் கிங்ஸ் அணியை பந்துவீச அழைத்தார். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அறிமுக வீரர் டாம் கொஹ்லர் காட்மோர் இணை தொடக்கம் கொடுத்தனர். 

பஞ்சாப் கிங்ஸ் அணி தரப்பில் கேப்டன் சாம் கரண் முதல் ஓவரை வீசினார். அதனை எதிர்கொண்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் முதல் பந்திலேயெ பவுண்டரி அடித்து இன்னிங்ஸைத் தொடங்கினார். இதனால் இன்றைய போட்டியில் ஜெய்ஸ்வால் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். 

இதையடுத்து களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வர, அவருடன் அறிமுக வீரரான டாம் கொஹ்லர் காட்மோர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதனல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 38 ரன்களை மட்டுமே சேர்த்தது. இந்நிலையில் இப்போட்டியில் சாம் கரண் பந்துவீச்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் கிளீன் போல்டாகிய காணொளி இணையத்தி வைரலாகி வருகிறது. 

 

அதன்படி சாம் கரண் வீசிய இன்னிங்ஸின் முதல் ஓவரின் நான்காவது பந்தை யஷஸ்வி ஜெய்ஸ்வால் பவுண்டரி அடிக்கும் முயற்சியில் பேட்டை விட, அது நேரடியாக இன்சைட் எட்ஜாகியதுடன் ஸ்டம்புகளையும் பதம் பார்த்தாது. இதனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4 ரன்களை மட்டுமே எடுத்த நிலையில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். இக்காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை