17ஆவது சீசன் ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸை இழந்து பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சீரான இடைவேளையில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய் அஷுதோஷ் சர்மா அணிக்கு ஃபினிஷிங்கைக் கொடுத்தார். 

Advertisement

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் கிங்ஸ் அணியானது 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதில் அதிகபட்சமாக அஷுதோஷ் சர்மா ஒரு பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 31 ரன்களைச் சேர்த்து அசத்தினார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் கேசவ் மகாராஜ் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இலக்கை விரட்டி வருகிறது. 

Advertisement

இந்நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் சஞ்சு சாம்சன் செய்த ரன் அவுட் ஒன்று இணையத்தில் பேசுபொருளாக  மாறியுள்ளது. அதன்படி இப்போட்டியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த லியாம் லிவிங்ஸ்டோன் 21 ரன்களைச் சேர்த்து அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். அப்போது இன்னிங்ஸின் 18ஆவது ஓவரில் அஷுதோஷ் சர்மா பந்தை அடித்துவிட்டு இரண்டு ரன்களை எடுக்க முயற்சித்தார். 

 

ஆனால் பந்து தனுஷ் கோட்டியான் கைகளுக்கு சென்றதை அறிந்து அஷுதோஷ் சர்மா பின் வாங்க, அதனை சரியாக கவனிக்காத லியாம் லிவிங்ஸ்டோன் இரண்டாவது ரன்னிற்காக கிரிஸை விட்டு வெளியேறி பாதியில் நின்று, மீண்டும் கிரீஸுக்கு செல்ல முயற்சித்தார். ஆனால் அதற்குள் தனுஷ் கோட்டியான் அடித்த த்ரோவை சரியாக பிடித்த சஞ்சு சாம்சன் அதனை ஸ்டம்புகளை பார்க்காமல் த்ரோ அடித்து அசத்தினார். 

இதன்மூலம் லியாம் லிவிங்ஸ்டோன் நூழிலையில் தனது விக்கெட்டை இழந்து பெவிலியனுக்கு திரும்பினார். இந்நிலையில் லியாம் லிவிங்ஸ்டோனை ரன் அவுட் செய்த சஞ்சு சாம்சனின் காணொளி இணையத்தில் வைரலாகியுள்ளது. இப்போட்டியில் எளிய இலக்கை விரட்டி வரும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்களைச் சேர்த்துள்ளது.

Advertisement

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News