டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டிய ஜஸ்பிரித் பும்ரா!

Updated: Wed, Apr 23 2025 22:17 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.

அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணிக்கு டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் டிராவிஸ் ஹெட் ரன்கள் ஏதுமின்றி விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கிய இஷான் கிஷானும் ஒரு ரன்னில் நடையைக் கட்டினார். மேற்கொண்டு மற்றொரு தொடக்க வீரரான அபிஷேக் சர்மா 8 ரன்னிலும், நிதீஷ் குமார் ரெட்டி 2 ரன்னிலும், அனிகெத் வர்மா 12 ரன்னிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 

இதன் காரணமாக சன்ரைசர்ஸ் அணி 35 ரன்களில் 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. பின்னர் ஜோடி சேர்ந்த ஹென்ரிச் கிளாசென் - அபினவ் மனோகர் இணை அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்தனர். இதில் ஹென்ரிச் கிளாசென் அரைசதம் கடந்ததுடன் 71 ரன்களையும், அபினவ் மனோகர் 43 ரன்களையும் சேர்த்து விக்கெட்டை இழக்க, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்களை மட்டுமே எடுத்தது. 

மும்பை இந்தியன்ஸ் தரப்பில் டிரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், தீபக் சஹார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனையடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடி வருகிறது. இந்நிலையில் இப்போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா சன்ரைசர்ஸ் அணியின் ஹென்ரிச் கிளாசெனின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் தனது 300 விக்கெட்டுகளை பூர்த்தி செய்தார்.

இதன்மூலம் இந்திய அணி தரப்பில் டி20 கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 5ஆவது வீரர் மற்றும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். முன்னதாக இந்திய அணியைச் சேர்ந்த யுஸ்வேந்திர சஹால், பியூஸ் சாவ்லா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோர் மட்டுமே இந்த மைல் கல்லை எட்டிய நிலையில் தற்போது அவர்கள் வரிசையில் ஜஸ்பிரித் பும்ராவும் இணைந்துள்ளார். 

டி20-ல் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்கள்

  • 373 விக்கெட்டுகள்- யுஸ்வேந்திர சாஹல் (317 இன்னிங்ஸ்)
  • 319 விக்கெட்டுகள்- பியூஷ் சாவ்லா (296 இன்னிங்ஸ்)
  • 318 விக்கெட்டுகள்- புவனேஷ்வர் குமார் (301 இன்னிங்ஸ்
  • 315 விக்கெட்டுகள்- ரவி அஷ்வின் (327 இன்னிங்ஸ்)
  • 300 விக்கெட்டுகள்- ஜஸ்பிரித் பும்ரா (237 இன்னிங்ஸ்)*

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் பிளேயிங் லெவன்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் ஹெட், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென், அனிகேத் வர்மா, பாட் கம்மின்ஸ்(கேப்டன்), ஹர்ஷல் படேல், ஜெய்தேவ் உனத்கட், ஜீஷன் அன்சாரி, எஷான் மலிங்கா

இம்பாக்ட் வீரர்கள்: அபினவ் மனோகர், சச்சின் பேபி, ராகுல் சாஹர், வியான் முல்டர், முகமது ஷமி

மும்பை இந்தியன்ஸ் பிளேயிங் லெவன்: ரியான் ரிக்கல்டன், வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா(கேப்டன்), நமன் திர், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரிட் பும்ரா, விக்னேஷ் புத்தூர்

Also Read: LIVE Cricket Score

இம்பாக்ட் வீரர்கள்: ரோஹித் சர்மா, கார்பின் போஷ், ராஜ் பாவா, சத்யநாராயண ராஜு, ராபின் மின்ஸ்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை