ஐபிஎல் 2025: ரிடென்ஷன் விதி, இம்பேக்ட் பிளேயர், ஏலத்தொகை உள்ளிட்ட விவரங்களை வெளியிட்டது பிசிசிஐ!

Updated: Sun, Sep 29 2024 09:17 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன.

மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.  இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது.

இதில் பல உரிமையாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் என்றும் கூறப்பட்டது. அதேசமயம் எதிர்வரும் ஐபிஎல் 2025 வீரர்களுக்கான மெகா ஏலம் இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் பங்கேற்கும் அணிகளுக்கான கட்டுபாடுகள், விதிமுறைகள் மற்றும் ஏலத்தொகை உள்ளிட்ட அறிவிப்புகளை பிசிசிஐ நேற்றைய தினம் வெளியிட்டுள்ளது. 

அதன்படில் எதிர்வரும் ஐபிஎல் வீரர்கல் மெகா எலாத்தில் பங்கேற்கும் அணிகளின் ஏலத்திகையானது ரூ. 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இத்தொகையானது ரூ.110 கோடிகளாக இருந்த நிலையில் இந்தாண்டு 10 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி எதிர்வரும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஒரு போட்டி தலா ரூ.7.5 லட்சம் சம்பளமாக வழங்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வீரர்களின் ஒப்பந்த தொகையில் சேராமல் தனிப்பட்ட முறையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து லீக் போட்டியில் விளையாடும் வீரர்களுக்கு கூடுதலாக ரூ.1.05 கோடி கிடைக்கும்.

மேற்கொண்டு எதிர்வரும் வரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தலா 6 வீரர்கள் வரை தக்க வைத்து கொள்ளலாம் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. இதில் சர்வதேச போட்டிகளில் விளையாடியவர்களில் அதிகபட்சம் 5 பேரையும், உள்நாட்டு போட்டிகளில் மட்டுமே விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களில் அதிகபட்சம் 2 பேரையும் தக்க வைக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. மேற்கொண்டு கடந்த 2019ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனியை அன்கேப்ட் வீரராக கருதாலாம் என்றும் ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்துள்ளது.  

மேற்கொண்டு எதிர்வரும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலத்தில் வெளிநாட்டு வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யவில்லையெனில் அடுத்தாண்டு நடைபெறும் ஏலத்திலும் அவர்களால் பங்கேற்க முடியாது என்றும், ஏலத்தில் தேர்வான வெளிநாட்டு வீரர் ஐபிஎல் தொடரில் விளையாடவில்லையெனில் அடுத்த 2 ஐபிஎல் தொடர் மற்றும் ஏலத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படும் என்று அதிரடி முடிவினையும் ஐபிஎல் நிர்வாகம் எடுத்துள்ளது. ஏனெனில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்ற சில வெளிநாட்டு வீரர்கள் சொந்த காரணங்களால் தொடரிலிந்து விலகியதை அடுத்து இந்த முடிவானது எடுக்கப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

இதுதவிர்த்து பெரும் விவாதமாக உருவெடுத்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை யானது எதிர்வரும் 2025 முதல் 2027 வரையிலான ஐபிஎல் தொடர் வரை கடைபிடிக்கப்படும் என்றும் ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. முன்னதாக இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை காரணமாக ஆல் ரவுண்டர்கள் உருவாவது தடைபடுவத்டன், பந்துவீச்சாளர்களுக்கு இந்த விதி முறையானது அநீதி இழைப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதிலும் குறிப்பாக ரோஹித் சர்மா, முகமது சிராஜ் உள்ளிட்ட இந்திய அணி வீரர்களும் இந்த இம்பேக்ட் பிளேயர் விதிமுறை குறித்து பேசியது விவாதமானதும் குறிப்பிடத்தக்கது.

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை