ஐபிஎல் 2025: பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் இணைந்த மிட்செல் ஓவன்!
இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் காரணமாக இடை நிறுத்தப்பட்ட 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கவுள்ளது. இதில் மே 17ஆம் தேதி நடைபெறும் போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
மேற்கொண்டு பாதுகாப்பு அச்சுறுத்தல் மற்றும் தொழில் நுட்ப கோளாறு காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியானது மே 24ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருபக்கம் ஐபிஎல் தொடர் மீண்டும் தொடங்க இருந்தாலும் வெளிநாட்டு வீரர்கள் எஞ்சியுள்ள போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஏனெனில் பாதுகாப்பு காரணம் மற்றும் சர்வதேச போட்டிகள் காரணமாக வெளிநாட்டு வீரர்கள் இத்தொடரில் விளையாடுவார்காளா என்ற சந்தேகங்கள் உள்ளன. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க வீரர்களில் சிலர் சர்வதேச போட்டிகளின் காரணமாக இத்தொடரிலிருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேசமயம் மற்ற வீரர்களைப் பொறுத்தவரையில் ஒருசிலரை தவிர்த்து மற்றவர்கள் பாதுக்காப்பு காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இத்தொடர் இடைநிறுத்தபடுவதற்கு முன்னதாக பாஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். இதனையடுத்து கிளென் மெக்ஸ்வெல்லிற்கு மாற்றாக ஆஸ்திரேலியாவின் இளம் அதிரடி வீரர் மிட்செல் ஓவனை ரூ.3 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதனையடுத்து எஞ்சியுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரின் எஞ்சிய லீக் போட்டிகளில் விளையாடுவதற்காக மிட்செல் ஓவன் இந்தியா வந்தடைந்துள்ளார். இதன்மூலம் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான லீக் போட்டியில் இவர் களமிறங்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பில் இருக்கும் நிலையில், மிட்செல் ஓவனின் வருகை அணிக்கு கூடுதல் பலமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: LIVE Cricket Score
பஞ்சாப் கிங்ஸ்: ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், மிட்செல் ஓவன்*, ஷஷாங்க் சிங், பிரப்சிம்ரன் சிங், ஹர்பிரீத் பிரார், விஜய்குமார் வைஷாக், யாஷ் தாக்கூர், மார்கோ ஜான்சன், ஜோஷ் இங்கிலிஸ், லோக்கி ஃபெர்குசன், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ஹர்னூர் பண்ணு, குல்தீப் சென், பிரியன்ஸ் ஆர்யா, ஆரோன் ஹார்டி, முஷீர் கான், சூர்யன்ஷ் ஷெட்ஜ், சேவியர் பார்ட்லெட், பைலா அவினாஷ், பிரவின் துபே, நேஹால் வதேரா.