எதிரணி வீரர்கள் நன்றாக பேட்டிங் செய்தனர் - பாட் கம்மின்ஸ்!
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அந்த அணியில் நிதீஷ் ரெட்டி 31 ரன்களையும், ஹென்ரிச் கிளாசென் 27 ரன்களையும், கேப்டன் பாட் கம்மின்ஸ் 22 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற விரர்கள் சோபிக்க தவறினர். இதனால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்களை மட்டுமே சேர்த்தது. டைட்டன்ஸ் தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியில் சாய் சுதர்ஷன், ஜோஸ் பட்லர் ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து ஏற்றமளித்தனர். இருப்பினும் வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக விளையாடி 49 ரன்களையும், இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் ஷுப்மன் கில் 61 ரன்களையும், ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்ட் 35 ரன்களையும் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர்.
இதன்மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் தங்களுடன் மூன்றாவது வெற்றியையும் பதிவுசெய்து அசத்தியுள்ளது. இப்போட்டியில் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார். இந்நிலையில் குஜராத் அணியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக விளையாடுவது கடினமாக இருந்தது என சன்ரைசர்ஸ் அணி கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.
Also Read: Funding To Save Test Cricket
இதுகுறித்து பேசிய கம்மின்ஸ், “இன்றைய போட்டிக்கான விக்கெட் விளையாட சற்று கடினமாக இருந்தது. இங்கு நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையிலும், ஆட்டத்தில் நீடித்தோம். மேலும் இந்த பிட்சில் பந்து அதிகமாக சுழலவில்லை, அதுமட்டுமில்லால் எல்லைகளில் சுற்றி கொஞ்சம் பனி இருந்தது, ஆனால் அவர்கள் நன்றாக பேட் செய்தனர். அவர்களின் வேகப்பந்து வீச்சு இன்றைய போட்டியில் விளையாட கடினமாக இருந்தது” என்று தெரிவித்துள்ளார்.