ஷுப்மனுடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன் - சாய் சுதர்ஷன்!

Updated: Mon, Apr 21 2025 22:27 IST
Image Source: Google

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ஈடன் கார்டன்ஸில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து குஜராத் டைட்டன்ஸை பேட்டிங் செய்ய அழைத்தது. 

அதன்படி களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது கேப்டன் ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோரது அரைசதத்தின் மூலமும், ஜோஸ் பட்லரின் அபாரமான ஃபினிஷிங்கின் மூலமும் 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்களைச் சேர்த்தது. இதில் அதிகபட்சமாக ஷுப்மன் கில் 90 ரன்களையு, சாய் சுதர்ஷன் 52 ரன்களையும், ஜோஸ் பட்லர் 42 ரன்களையும் சேர்த்தனர்.

மேற்கொண்டு இப்போட்டியில் அரைசதம் கடந்து அசத்திய சாய் சுதர்ஷன் நடப்பு ஐபிஎல் தொடரில் 400 ரன்களைக் கடந்த முதல் வீரர் எனும் பெருமையுடன், அதிக ரன்களைக் குவித்த வீரருக்கான ஆர்ஞ்சு தொப்பியையும் தன்வசப்படுத்தியுள்ளார். இந்நிலையில் இந்த ஆட்டம் குறித்து பேசிய சுதர்ஷன், “ஆட்டத்தின் தொடக்கத்தில், பிட்ச் மிகவும் மெதுவாக இருந்தது, பவர்பிளேயில் எங்களுக்கு ரன்களைச் சேர்க்க மிகவும் கடினமாக இருந்தது. அதன் பிறகு, விக்கெட்டின் வேகத்தைப் புரிந்துகொண்டோம்.

நானும் ஷுப்மன் கில்லும்  ஒருவருக்கு ஒருவர் தொடர்ந்து பேசினோன். அதனால் அவர்கள் கொடுத்த மோசமான பந்தைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சித்தோம், ஆட்டத்தை ஆழமாக எடுத்துச் செல்ல முயற்சித்தோம். மேலும் அவருடன் இணைந்து விளையாடுவதை ரசித்து வருகிறேன். அவரது அனுபவம் எனக்கு உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் தொடர்ந்து ரன்களைக் குவித்து வரும் சாய் சுதர்ஷனுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. 

குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: சாய் சுதர்சன், ஷுப்மான் கில்(கேப்டன்), ஜோஸ் பட்லர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ராகுல் டெவாடியா, வாஷிங்டன் சுந்தர், ஷாருக் கான், ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்

இம்பாக்ட் வீரர்கள்: இஷாந்த் சர்மா, மஹிபால் லோம்ரோர், அனுஜ் ராவத், கரீம் ஜனத், அர்ஷத் கான்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பிளேயிங் லெவன்: ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், அஜிங்க்யா ரஹானே(கேப்டன்), வெங்கடேஷ் ஐயர், ரின்கு சிங், மொயின் அலி, ஆண்ட்ரே ரசல், ரமன்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வைபவ் அரோரா, வருண் சக்கரவர்த்தி

Also Read: LIVE Cricket Score

இம்பாக்ட் வீரர்கள்: மனிஷ் பாண்டே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரோவ்மேன் பவல், லுவ்னித் சிசோடியா, அனுகுல் ராய்

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை