நவம்பர் இறுதியில் நடைபெறும் ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் - தகவல்!

Updated: Wed, Sep 18 2024 22:01 IST
Image Source: Google

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், இத்தொடருக்கான வீரர்கள் மேகா ஏலம் இந்தாண்டு இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஐபிஎல் அணிகள் எந்தெந்த வீரர்களை தக்கவைக்கும் என்ற விவாதங்கள் எழத்தொடங்கியுள்ளன. மேற்கொண்டு எதிர்வரும் வீரர்கள் ஏலத்திற்கு முன்னதாக ஐபிஎல் அணிகளில் எத்தனை வீரர்கள் தக்கவைக்கலாம் என்ற பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன. 

இது தொடர்பான ஐபிஎல் உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் மும்பையில் உள்ள பிசிசிஐ தலைமையகத்தில் சமீபத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது பல்வேறு விசயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்ட போதிலும், வெளிநாட்டு வீரர்கள் சிலர் அணியில் ஒப்பந்தமான நிலையில் தவறான காரணங்களை கூறி தொடரில் இருந்து விலகுவதை வாடிக்கையாக வைத்துள்ளது குறித்து பிரதானமாக பேசப்பட்டது.

இதில் பல உரிமையாளர்கள் இந்த பிரச்சனை குறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர். இந்த கூட்டத்திற்கு பிறகு பிசிசிஐ இந்த விஷயத்தில் கடுமையான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஏலத்தில் வாங்கப்படும் வீரர்கள் கடைசி நேரத்தில் காயத்தை தவிர்த்து சொந்த காரணத்திற்காக வெளியேறினால் அவர்களை தடை செய்ய வேண்டும் என பிசிசிஐயிடம் கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. 

இதனால் இந்த ஐபிஎல் தொடரின் வீரர்கள் ஏலத்தின் மீது அதிகளவு எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில் எதிவரும் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் வரும் நவம்பர் மாத இறுதியிலோ அல்லது டிசம்பர் மாத தொடக்கத்திலோ நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பிசிசிஐ வட்டாரத்தில் இருந்து வெளியான தகவலின் படி, ஐபிஎல் 2025 ஏலம் இந்த ஆண்டு நவம்பர் இறுதியில் அல்லது டிசம்பர் தொடக்கத்தில் நடைபெறும். இதற்கான விதிமுறைகள் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. 

Also Read: Funding To Save Test Cricket

ஏற்கெனவே ஐபிஎல் அணிகள் எதிர்வரும் வீரர்கள் மெகா ஏலத்திற்காக தீவிரமாக தயாராகி வருவதுடன், அணியின் பயிற்சியாளர்கள், உதவி பயிற்சியாளர்கள், தக்கவைக்கும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படவுள்ள வீரர்கள் குறித்த வேலைகளை தொடங்கியுள்ளன. இவ்வாறான சூழ்நிலையில் ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் எப்போது நடைபெறும் என்பது குறித்ஹ அறிவிப்பு வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மட்டுமின்றி ஐபிஎல் அணிகளும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். 

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள்

அதிகம் பார்க்கப்பட்டவை