ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் முபை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் உள்ள ஏக்னா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

Advertisement

இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தி இருந்தாலும், அணியின் கேப்டன் மற்றும் இளம் வீரருக்கு பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது. அதன்படி நேற்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதாக 20ஆவது ஓவரின் போதே ஒரு ஃபீல்டர் 30 யார்ட் வட்டத்திற்குள் வைத்து விளையாட வேண்டும் என்று அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. 

Advertisement

இந்நிலையில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்திற்கு போட்டி கட்டணத்தில் இருந்து ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் ஸ்லோ ஓவர் ரேட் காரணமாக அபராதத்தைப் பெறும் மூன்றாவது கேப்டன் ரிஷப் பந்த் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஹர்திக் பாண்டியா மற்றும் ரியான் பராக் ஆகியோருக்கும் அபராதம் விதிக்கப்பட்டிருந்த குறிப்பிடத்தக்கது. 

அதேசமயம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் இளம் வீரர் திக்வேஷ் சிங் நடத்தை விதிகளை மீறியதாக போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதத்தைப் பெற்றுள்ளார். நேற்றைய போட்டியில் நமந்தீரின் விக்கெட்டை வீழ்த்தியதை கொண்டாடும் வகையில் திக்வேஷ் சிங் சில செய்கைகளை செய்தார். ஆனால் ஐபிஎல் நடத்தை விதிகளின் படி இது தவறு என்பதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குற்றத்திற்காக அவருக்கு இரண்டாவது முறையாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

இப்போட்டி குறித்து பேசினால், டாஸை இழந்து முதலில் விளையாடிய லக்னோ அணியில் மிட்செல் மார்ஷ் 60 ரன்களிலும், ஐடன் மார்க்ரம் 53 ரன்களிலும் என விக்கெட்டை இழக்க, அதிரடியாக விளையாடிய ஆயூஷ் பதோனியும் 30 ரன்களையும், டேவிட் மில்லர் 27ரன்களையும் சேர்த்தனர்.லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 203 ரன்களைக் குவித்தது. மும்பை இந்தியன்ஸ் அணி தரப்பில் கேப்டன் ஹர்திக் பாண்டியா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

Also Read: Funding To Save Test Cricket

Advertisement

பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் 67 ரன்களையும், அதிரடியாக விளையாடிய நமன் தீர் 46 ரன்களையும் சேர்த்ததை தவிர்த்து மற்ற வீரர்கள் யாரும் பெரிதளவில் ரன்களைச் சேர்க்கவில்லை. இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன்மூலம் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியானது 12 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. 

About the Author

Bharathi Kannan
Bharathi Kannan - He is very interested in cricket. Participated in Domestic level cricket matches. He has experience working in sports news in various media. He has the experience of providing news from different angles non-stop in all types of cricket series like IPL, World Cup. He is also very interested in sports news including cricket, tennis, football and kabaddi. பாரதி கண்ணன் - கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவர். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றுள்ளார். பல்வேறு ஊடகங்களிலும் விளையாட்டு செய்திகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். ஐபிஎல், உலகக்கோப்பை கிரிக்கெட் என அனைத்து வடிவிலான கிரிக்கெட் தொடர்களின் போதும் இடைவிடாது பல்வேறு கோணங்களில் செய்திகளை அளித்த அனுபவம் உண்டு. கிரிக்கெட் மட்டுமின்றி டென்னிஸ், கால்பந்து, கபடி உள்ளிட்ட இதர விளையாட்டு செய்திகளிலும் அதீத ஆர்வமுள்ளவர். Read More
Latest Cricket News