ஐபிஎல் தொடரில் 150 விக்கெட்டுகள்; புதிய மைல்கல்லை எட்டிய ரஷித் கான்!
ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று வரும் 5ஆவது லீக் போட்டியில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்த்து ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
அஹ்மதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று வரும் இபோட்டியில் டாஸை வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரப்சிம்ரன் சிங் - பிரியான்ஷ் ஆர்யா இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் பிரப்சிம்ரன் சிங் 5 ரன்களை மட்டுமே எட்த்திருந்த நிலையில் விக்கெட்டை இழக்க, மறுபக்கம் அறிமுக வீரர் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார்.
இப்போட்டியில் அபாரமாக விளையாடி வந்த பிரியான்ஷ் ஆர்யா அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 47 ரன்களைச் சேர்த்திருந்த நிலையில் ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரஷித் கான் இப்போட்டியில் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ஐபிஎல் தொடரில் புதிய மைல்கல் ஒறையும் எட்டியுள்ளார்.
அதன்படி இப்போட்டியில் பிரியான்ஷ் ஆர்யாவின் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம் ரஷித் கான் ஐபிஎல் தொடரில் தனது 150ஆவது விக்கெட்டை பூர்த்தி செய்தார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 12ஆவது வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார். அதேசமயம் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலிலும் ரஷித் கான் மூன்றாம் இடத்திற்கு முன்னேறி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐபிஎல் தொடரில் அதிவேக 150 விக்கெட்டுகள்
- 105 போட்டிகள் - லசித் மலிங்கா
- 118 போட்டிகள் - யுஸ்வேந்திர சாஹல்
- 122 போட்டிகள் - ரஷீத் கான்*
- 124 போட்டிகள் - ஜஸ்பிரித் பும்ரா
- 137 போட்டிகள் - டுவைன் பிராவோ
- 138 போட்டிகள் - புவனேஷ்வர் குமார்
பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்: பிரப்சிம்ரன் சிங், பிரியான்ஷ் ஆர்யா, ஷ்ரேயாஸ் ஐயர்(c), ஷஷாங்க் சிங், மார்கஸ் ஸ்டோய்னிஸ், கிளென் மேக்ஸ்வெல், சூர்யான்ஷ் ஷேட்ஜ், அஸ்மதுல்லா உமர்சாய், மார்கோ ஜான்சன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல்.
இம்பேக்ட் பிளேயர்: நேஹல் வதேரா, பிரவீன் துபே, வைஷாக் விஜய்குமார், ஹர்ப்ரீத் பிரார், விஷ்ணு வினோத்
குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்: ஷுப்மான் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாய் சுதர்சன், ஷாருக் கான், ராகுல் திவேத்தியா, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், அர்ஷத் கான், ரஷீத் கான், ககிசோ ரபாடா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா.
Also Read: Funding To Save Test Cricket
இம்பேக்ட் பிளேயர் - ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், க்ளென் பிலிப்ஸ், இஷாந்த் சர்மா, அனுஜ் ராவத், வாஷிங்டன் சுந்தர்