ஐபிஎல் 2025: படிதர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 197 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆர்சிபி!
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நாளுக்கு நாளை விறுவிறுப்புக்கு பஞ்சமின்றி நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்காளூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்றள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது முதலில் பந்துவீசுவதாக அறிவித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை பேட்டிங் செய்ய அழைத்தது. அதன்படி களமிறங்கிய ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் மற்றும் விராட் கோலி இணை தொடக்கம் கொடுத்தனர். இதில் விராட் கோலி ஒருமுனையில் நிதானமாக விளையாடிய நிலையில், மறுபக்கம் பில் சால்ட் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டியதுடன் அணியின் ஸ்கோரையும் மளமளவென உயர்த்தினார்.
இதன்மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 45 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்தானர். அதன்பின் 5 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 32 ரன்களில் பில் சால்ட் விக்கெட்டை இழக்க, அடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய தேவ்தத் படிக்கல் தனது பங்கிற்கு 2 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் என 27 ரன்களை எடுத்த கையோடு நடையைக் கட்டினார். அதன்பின் விராட் கோலியுடன் இணைந்த ரஜத் படிதாரும் அதிரடியாக விளையாடி ஸ்கோரை உயர்த்தினார். அதேசமயம் விராட் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்ஸர் என 31 ரன்களில் விக்கெட்டை இழக்க, அடுத்து வந்த லிவிங்ஸ்டோனும் 10 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.
மேற்கொண்டு அதிரடியாக விளையாடும் முயற்சியில் ஜித்தேஷ் சர்மாவும் 12 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுமுனையில் பொறுப்புடன் விளையாடி வந்த ராஜத் படிதர் தனது அரைசதத்தைப் பூர்த்தி செய்து அசத்தினார். பின்னர் 4 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் என 51 ரன்கள் எடுத்த நிலையில் ரஜத் படிதாரும், அடுத்து களமிறங்கிய குர்னால் பாண்டியா ரன்கள் ஏதுமின்றியும் என அடுத்தடுத்து மதிஷா பதிரானா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தனர். இறுதியில் டிம் டேவிட் அடுத்தடுத்து சிக்ஸர்களை பறக்கவிட்டு 22 ரன்களைச் சேர்த்தார்.
Also Read: Funding To Save Test Cricket
இதன்மூலம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களைச் சேர்த்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் தரப்பில் அபாரமான பந்துவீச்சை வெளிப்படுத்திய நூர் அஹ்மத் 3 விக்கெட்டுகளையும், மதீஷா பதிரானா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.