மார்ச் 22-ல் முதல் தொடங்கும் ஐபிஎல் 2025 தொடர்; ரசிகர்கள் கொண்டாட்டம்!

Updated: Sun, Feb 16 2025 20:02 IST
Image Source: Google

இந்தியாவில் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தியன் பிரீமியர் லீக் தொடரானது வெற்றிகரமாக 17 சீசன்களை கடந்து, 18ஆவது சீசனில் அடியெடுத்து வைக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான வீரர்கள் மெகா ஏலமானது கடந்த நவம்பர் மாதம் சௌதீ அரேபியாவில் உள்ள ஜித்தா நகரில் நடைபெற்றது. இதில் மொத்தம் 574 வீரர்கள் இறுதி செய்யப்பட்டு ஏலம் நடத்தப்பட்டது.

அந்தவகையில் நடைபெற்று முடிந்த வீரர்களுக்கான மெகா ஏலத்தில் அதிகபட்சமாக இந்திய அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை ரூ.27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ஸ்ரேயாஸ் ஐயரை ரூ.26.76 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியாலும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர்கள் எனும் சாதனைகளையும் படைத்தனர்.

இதனால் நடப்பு ஐபிஎல் தொடர் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் 18ஆவது சீசன் ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணையை ஐபிஎல் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 22ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் இறுதிப்போட்டியானது மே 25ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு முதல் தகுதிச்சுற்று மே 20ஆம் தேதியும், எலிமினேட்டர் சுற்று 21ஆம் தேதியும், இரண்டாவது தகுதிச்சுற்று மே 23ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதுதவிர்த்து மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது. மேற்கொண்டு மார்ச் 23ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. 

இத்தொடரின் மூன்றாவது லீக் போட்டியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கத்தில் பலப்பரீட்சை நடத்தவுள்ளது. இதுதவிர்த்து இத்தொடரின் முதல் தகுதிச்சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று ஆட்டங்கள் ஹைதராபாத்திலும், இரண்டாவது தகுதிச்சுற்று மற்றும் இறுதிப்போட்டி கொல்கத்தாவிலும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

ஐபிஎல் 2025 தொடரின் முழு அட்டவணை

  • போட்டி 1: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மார்ச் 22, மாலை 7:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 2: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மார்ச் 23, பிற்பகல் 3:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 3: சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மார்ச் 23, மாலை 7:30 மணி, சென்னை
  • போட்டி 4: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மார்ச் 24, மாலை 7:30 மணி, விசாகப்பட்டினம்
  • போட்டி 5: குஜராத் டைட்டன்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மார்ச் 25, மாலை 7:30 மணி, அஹமதாபாத்
  • போட்டி 6: ராஜஸ்தான் ராயல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மார்ச் 26, மாலை 7:30 மணி, கௌகாத்தி
  • போட்டி 7: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மார்ச் 27, 7:30 மணி மாலை, ஹைதராபாத்
  • போட்டி 8: சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மார்ச் 28, மாலை 7:30, சென்னை
  • போட்டி 9: குஜராத் டைட்டன்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மார்ச் 29, மாலை 7:30, அஹமதாபாத்
  • போட்டி 10: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மார்ச் 30, மாலை 3:30, விசாகப்பட்டினம்
  • போட்டி 11: ராஜஸ்தான் ராயல்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மார்ச் 30, மாலை 7:30, கௌகாத்தி
  • போட்டி 12: மும்பை இந்தியன்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மார்ச் 31, மாலை 7:30, மும்பை
  • போட்டி 13: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 01, மாலை 7:30, லக்னோ
  • போட்டி 14: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 02, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 15: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஏப்ரல் 03, மாலை 7:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 16: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஏப்ரல் 04, மாலை 7:30 மணி, லக்னோ
  • போட்டி 17: சென்னை சூப்பர் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், ஏப்ரல் 05, மாலை 3:30 மணி, சென்னை
  • போட்டி 18: பஞ்சாப் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 05, மாலை 7:30 மணி, சண்டிகர்
  • போட்டி 19: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஏப்ரல் 06, மாலை 3:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 20: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 06, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 21: மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஏப்ரல் 07, மாலை 7:30 மணி, மும்பை
  • போட்டி 22: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஏப்ரல் 08, மாலை 7:30 மணி, சண்டிகர்
  • போட்டி 23: குஜராத் டைட்டன்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 09, மாலை 7:30 மணி, அஹமதாபாத்
  • போட்டி 24: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs டெல்லி கேப்பிட்டல்ஸ், ஏப்ரப் 10, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 25: சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏப்ரல் 11, மாலை 7:30 மணி, சென்னை
  • போட்டி 26: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 12, மாலை 3:30 மணி, லக்னோ
  • போட்டி 27: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 12, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 28: ராஜஸ்தான் ராயல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஏப்ரல் 13, மாலை 3:30 மணி, ஜெய்ப்பூர்
  • போட்டி 29: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், ஏப்ரல் 13, மாலை 7:30 மணி, டெல்லி
  • போட்டி 30: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்,ஏப்ரல் 14, மாலை 7:30 மணி, லக்னோ
  • போட்டி 31: பஞ்சாப் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏப்ரல் 15, மாலை 7:30 மணி, சண்டிகர்
  • போட்டி 32: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 16, மாலை 7:30 மணி, டெல்லி
  • போட்டி 33: மும்பை இந்தியன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஏப்ரல் 17, மாலை 7:30 மணி, மும்பை
  • போட்டி 34: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 18, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 35: குஜராத் டைட்டன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், ஏப்ரல் 19, பிற்பகல் 3:30 மணி, அஹமதாபாத்
  • போட்டி 36: ராஜஸ்தான் ராயல்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஏப்ரல்19, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
  • போட்டி 37: பஞ்சாப் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஏப்ரல் 20, பிற்பகல் 3:30 மணி, சண்டிகர்
  • போட்டி 38: மும்பை இந்தியன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், ஏப்ரல் 20, மாலை 7:30 மணி, மும்பை
  • போட்டி 39: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 21, மாலை 7:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 40: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், ஏப்ரல் 22, மாலை 7:30 மணி, லக்னோ
  • போட்டி 41: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs மும்பை இந்தியன்ஸ், ஏப்ரல் 23, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 42: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ், ஏப்ரல் 24, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 43: சென்னை சூப்பர் கிங்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ஏப்ரல் 25, மாலை 7:30 மணி, சென்னை
  • போட்டி 44: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல் 26, மாலை 7:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 45: மும்பை இந்தியன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், ஏப்ரல் 27, மாலை 3:30 மணி, மும்பை
  • போட்டி 46: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ஏப்ரல் 27, மாலை 7:30 மணி, டெல்லி
  • போட்டி 47: ராஜஸ்தான் ராயல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், ஏப்ரல் 28, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
  • போட்டி 48: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ஏப்ரல்-29, மாலை 7:30 மணி, டெல்லி
  • போட்டி 49: சென்னை சூப்பர் கிங்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், ஏப்ரல்-30, மாலை 7:30 மணி, சென்னை
  • போட்டி 50: ராஜஸ்தான் ராயல்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மே 01, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
  • போட்டி 51: குஜராத் டைட்டன்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மே 02, மாலை 7:30 மணி, அஹமதாபாத்
  • போட்டி 52: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சென்னை சூப்பர் கிங்ஸ், மே 03, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 53: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மே 04, மாலை 3:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 54: பஞ்சாப் கிங்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மே 04, மாலை 7.30 மணி, தர்மசாலா
  • போட்டி 55: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், மே 05, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 56: மும்பை இந்தியன்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மே 06, மாலை 7:30 மணி, மும்பை
  • போட்டி 57: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மே 07, மாலை 7:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 58: பஞ்சாப் கிங்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், மே 08, மாலை 7:30 மணி, தர்மசாலா
  • போட்டி 59: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மே 09, மாலை 7:30மணி, லக்னோ
  • போட்டி 60: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மே 10, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 61: பஞ்சாப் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ், மே 11, மாலை 3:30 மணி, தர்மசாலா
  • போட்டி 62: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ், மே 11, மாலை 7:30 மணி, டெல்லி
  • போட்டி 63: ​​சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராஜஸ்தான் ராயல்ஸ், மே 12, மாலை 7:30 மணி, சென்னை
  • போட்டி 64: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மே 13, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 65: குஜராத் டைட்டன்ஸ் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மே 14, மாலை 7:30 மணி, அஹமதாபாத்
  • போட்டி 66: மும்பை இந்தியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ், மே 15, மாலை 7:30 மணி, மும்பை
  • போட்டி 67: ராஜஸ்தான் ராயல்ஸ் vs பஞ்சாப் கிங்ஸ், மே 16, மாலை 7:30 மணி, ஜெய்ப்பூர்
  • போட்டி 68: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ், மே 17, மாலை 7:30 மணி, பெங்களூரு
  • போட்டி 69: குஜராத் டைட்டன்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ், மே 18, பிற்பகல் 3:30 மணி, அஹமதாபாத்
  • போட்டி 70: லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத், மே 18, மாலை 7:30 மணி, லக்னோ
  • போட்டி 71: முதல் குவாலிஃபையர் 1, மே 20, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 72: எலிமினேட்டர், மே 21, மாலை 7:30 மணி, ஹைதராபாத்
  • போட்டி 73: இரண்டாவது குவாலிஃபையர், மே 23, மாலை 7:30 மணி, கொல்கத்தா
  • போட்டி 74: இறுதிப்போட்டி, மே 25, மாலை 7:30 மணி, கொல்கத்தா.
TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை