ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி!

Updated: Sat, Mar 15 2025 20:17 IST
ஐபிஎல் 2025: ஆர்சிபி அணியில் இணைந்த விராட் கோலி!
Image Source: Google

உலகெங்கிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் என்றழைக்கப்படும் இந்திய பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 18ஆவது சீசன் எதிர்வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் கோலாகலமாக தொடங்கவுள்ளது.

இதில் நடைபெறும் முதல் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கொண்டு ராஜத் பட்டிதார் தலைமையில் களமிறங்கும் ஆர்சிபி அணி தொடரை வெற்றியுடன் தொடங்குமா என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. 

இந்நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி அந்த அணியின் பயிற்சி மிகாமில் இன்று இணைந்துள்ளார். முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்ற இந்திய அணியின் ஒரு அங்கமாக இருந்த விராட் கோலி, தற்போது ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக பெங்களூரு வந்தடைந்தார். இதையடுத்து ஆர்சிபி அணி தரப்பில் அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. அக்காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். 

கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக மட்டும் விளையாடி வரும் விராட் கோலி, இதுவரை 252 போட்டிகளில் விளையாடி 8 சதங்கள் 55 அரைசதங்கள் என 8004 ரன்களைக் குவித்துள்ளார். இதன்மூலம் ஐபிஎல் தொடர் வரலாற்றில் அதிக ரன்களை அடித்த வீரர் எனும் சாதனையையும் தன்வசம் வைத்துள்ளர். இதனால் எதிர்வரும் ஐபிஎல் தொடரிலும் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Royal Challengers Bengaluru (@royalchallengers.bengaluru)

Also Read: Funding To Save Test Cricket

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ரஜத் பட்டிதார் (கேப்டன்), யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் சர்மா, குர்னால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, மனோஜ் பந்தேஜ், ஜேக்கப் பெத்தேல், தேவ்தத் பாடிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி இங்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி

TAGS

தொடர்புடைய கிரிக்கெட் செய்திகள் ::

அதிகம் பார்க்கப்பட்டவை