சென்னை சூப்பர் கிங்ஸ் vs மும்பை இந்தியன்ஸ் - அணிகள் ஓர் அலசல்!
ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் நேற்றைய தினம் கோலாகலமாக தொடங்கியது. இதில் இன்று நடைபெறவுள்ள மூன்றாவது லீக் போட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டி சென்னையில் உள்ள எம் ஏ சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஐபிஎல் தொடரில் அதிகமுறை கோப்பையை வென்றுள்ள இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளதன் காரணமாக இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன. இந்நிலையில் இரு அணிகளின் பலம், அணியின் உத்தேச லெவன் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இம்முறை 6ஆவது பட்டத்தை வெல்லும் முனைப்புடன் இத்தொடரை எதிர்கொள்ளவுள்ளது. அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரச்சின் ரவீந்திரா, டெவான் கான்வே, ராகுல் திரிபாதி, தீபக் ஹூடா, விஜய் சங்கர், ஷிவம் தூபே, மகேந்திர சிங் தோனி, சாம் கரண், ஆண்ட்ரே சித்தார்த் என அதிரடியான வீரர்கள் வரிசைக்கட்டி நிற்கின்றனர்.
மறுபக்கம் அணியின் வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் மதீஷா பதிரானா, சாம் கரண், கலீல் அஹ்மத், முகேஷ் சௌத்ரி, நாதன் எல்லிஸ், குர்ஜன்ப்ரீத் சிங், கமலேஷ் நாகர்கொட்டி ஆகியோரும் சுழற்பந்து வீச்சில் ரவீந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, நூர் அஹ்மத், ஸ்ரேயாஸ் கோபால் ஆகியோரும் உள்ளனர். இதனால் பேட்டிங், பந்துவீச்சு என சமபலத்துடன் இருக்கும் சிஸ்கே அணி முதல் போட்டியில் வெற்றிபெறுமா என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் உத்தேச லெவன்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திர, ராகுல் திரிபாதி, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, மகேந்திர சிங் தோனி, ரவிச்சந்திரன் அஸ்வின், மதிஷா பதிரனா, நூர் அகமது, கலீல் அகமது.
மும்பை இந்தியன்ஸ்
ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் 6ஆவது பட்டத்தை நோக்கி இத்தொடரை எதிர்கொள்கிறது. அந்த அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ரோஹித் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ராபின் மின்ஸ், நமன் திர், வில் ஜேக்ஸ், பெவன் ஜேக்கப்ஸ், ரியான் ரிக்கெல்டன் போன்ற அதிரடி வீரர்கள் உள்ளனர். இருப்பினும் இதில் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதல் போட்டியில் விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
பந்துவீச்சை பொறுத்தவரையில் ஜஸ்பிரித் பும்ர முதல் சில போட்டிகளை தவறவிடவுள்ளது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் விசயமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் டிரென்ட் போல்ட், தீபக் சஹார், ரீஸ் டாப்லீ, கார்பின் போஷ், அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோர் வேகப்பந்து வீச்சிலும், மிட்செல் சான்ட்னர், கரண் சர்மா, முஜீப் உர் ரஹ்மான் ஆகியோர் சுழற்பந்து வீச்சிலும் இருப்பது அணிக்கு பலமாக பார்க்கப்படுகிறது. இதனால் அந்த அணி எவ்வாறு செயல்படும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரோஹித் சர்மா, ரியான் ரிக்கல்டன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), நமன் தீர், ராபின் மின்ஸ் , மிட்செல் சாண்ட்னர், தீபக் சாஹர், கர்ண் சர்மா, டிரென்ட் போல்ட், முஜீப் உர் ரஹ்மான்.
நேருக்கு நேர்
- மோதிய போட்டிகள் – 37
- சென்னை சூப்பர் கிங்ஸ் – 17
- மும்பை இந்தியன்ஸ் – 20
Also Read: Funding To Save Test Cricket
ஃபேண்டஸி லெவன் டிப்ஸ்
- விக்கெட் கீப்பர் - ரியான் ரிக்கல்டன்
- பேட்ஸ்மேன்கள் - ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ரச்சின் ரவீந்திர, ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), திலக் வர்மா (துணை கேப்டன்)
- ஆல்-ரவுண்டர்கள் - ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சாண்ட்னர்
- பந்து வீச்சாளர்கள் - நூர் அகமது, மதிஷா பதிரானா.